பாகிஸ்தான் மகளிர் அணியை பந்தாடிய இலங்கை மகளிர் அணி – 6ஆவது முறையாக ஃபைனலில் இந்தியா – இலங்கை பலப்பரீட்சை!

Published : Jul 26, 2024, 10:36 PM IST
பாகிஸ்தான் மகளிர் அணியை பந்தாடிய இலங்கை மகளிர் அணி – 6ஆவது முறையாக ஃபைனலில் இந்தியா – இலங்கை பலப்பரீட்சை!

சுருக்கம்

மகளிர் ஆசிய கோப்பை 2024 தொடரின் 2ஆவது அரையிறுதிப் போட்டியில் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் மகளிர் அணியை வீழ்த்தி இலங்கை மகளிர் அணி இறுதிப் போட்டிக்கு சென்றுள்ளது.

பாகிஸ்தான் மகளிர் அணிக்கு எதிரான மகளிர் ஆசிய கோப்பை 2024 தொடரின் 2ஆவது அரையிறுதிப் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை மகளிர் அணி பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய பாகிஸ்தான் மகளிர் அணியானது 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 140 ரன்கள் குவித்தது. இதில் அதிகபட்சமாக முனீபா அலி 37 ரன்கள் எடுத்தார். குல் ஃபெரோஷா 25 ரன்கள் எடுத்துக் கொடுத்தார். நிடா தர் மற்றும் ஃபாத்திமா சனா இருவரும் தலா 23 ரன்கள் எடுத்தனர். பின்னர் 141 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு இலங்கை பேட்டிங் செய்தது.

Womens Asia Cup 2024: இலங்கைக்கு எதிரான 140 ரன்கள் குவித்த பாகிஸ்தான் – இறுதிப் போட்டி யாருக்கு?

இதில், விஷ்மி குணரத்னே மற்றும் சமரி அத்தபத்து இருவரும் தொடக்க வீராங்கனைகளாக களமிறங்கினர். குணரத்னே 0 ரன்னில் ஆட்டமிழக்க அத்தபத்து அதிரடியாக விளையாடி 63 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அதன் பிறகு வந்த ஹர்ஷிதா சமரவிக்ரமா 12 ரன்னிலும், கவிஷா தில்ஹரி 17 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். ஒரு கட்டத்தில் இலங்கை 17 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 125 ரன்கள் மட்டுமே எடுத்திந்தது. இலங்கை வெற்றிக்கு கடைசி 3 ஓவர்களில் 20 ரன்கள் தேவைப்பட்டது.

ஒலிம்பிக் தொடக்க விழாவிற்கு முன் பிரான்ஸின் ரயில் நெட்வொர்க் மீது தாக்குதல் – ரயில் சேவை பாதிப்பு!

போட்டியின் 17.1ஆவது ஒவரில் ஹசினி ஃபெரேரா 3 ரன்னில் ஆட்டமிழந்தார். இதையடுத்து களமிறங்கிய சுகந்திகா குமரி, அனுஷ்கா சஞ்சீவனி உடன் இணைந்து நிதானமாக விளையாடி ரன்கள் குவித்தார். அவர், 10 ரன்களில் ஆட்டமிழந்தார். கடைசியில் இலங்கையின் வெற்றிக்கு 4 பந்துகளில் 3 ரன்கள் தேவைப்பட்டது. 2 பந்துகளில் ஒரு ரன் கூட எடுக்கப்படவில்லை. கடைசியாக 2 பந்துக்கு 2 ரன் தேவைப்பட்டது. ஆனால், 5ஆவது பந்தில் வைடாக வீசவே போட்டியானது டிரா ஆனது. இறுதியாக அனுஷ்கா சஞ்சீவனி ஒரு ரன் எடுக்கவே இலங்கை 19.5ஆவது ஓவரில் 7 விக்கெட்டுகளை இழந்து 141 ரன்கள் குவித்து 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 6ஆவது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

Paris Olympics 2024 – நாளை ஜூலை 27, இந்தியா விளையாடும் போட்டிகள் என்னென்ன? முதல் பதக்கம் வெல்லுமா?

இதுவரையில் நடைபெற்ற 8 ஆசிய கோப்பை தொடர்களில் இந்தியா 7 முறை டிராபியை கைப்பற்றியுள்ளது. வங்கதேச அணி ஒரு முறை டிராபி வென்றுள்ளது. 5 முறை இறுதிப் போட்டிக்கு வந்த இலங்கை, இந்தியாவிடம் தோல்வி அடைந்து 2ஆவது இடம் பிடித்திருக்கிறது. தற்போது 6ஆவது முறையாக இந்தியா மற்றும் இலங்கை மகளிர் அணிகள் இறுதிப் போட்டியில் மோதுகின்றன. வரும் 28ஆம் தேதி மகளிர் ஆசிய கோப்பை 2024 இறுதிப் போட்டி நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

PREV
RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
click me!

Recommended Stories

ஆஷஸ் 2வது டெஸ்ட்.. இங்கிலாந்தை மீண்டும் அசால்ட்டாக ஊதித்தள்ளிய ஆஸ்திரேலியா.. பிரம்மாண்ட வெற்றி!
ஸ்மிருதி மந்தனா-பலாஷ் முச்சல் திருமணம் ரத்து..! அதிகாரப்பூர்வமாக அறிவித்த மந்தனா..! இதுதான் காரணம்!