மகளிர் ஆசிய கோப்பை 2024 தொடரின் முதல் அரையிறுதிப் போட்டியில் வங்கதேச அணியை விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய மகளிர் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.
மகளிர் ஆசிய கோப்பை 2024 தொடரின் முதல் அரையிறுதிப் போட்டி இன்று நடைபெற்றது. இதில், இந்தியா மற்றும் வங்கதேச மகளிர் அணிகள் மோதின. டாஸ் வென்ற வங்கதேச மகளிர் அணி முதலில் பேட்டிங் செய்து 20 ஒவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 80 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதில் அதிகபட்சமாக கேப்டன் நிகர் சுல்தானா 32 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். சோமா அக்தர் 19 ரன்கள் எடுத்தார். மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
undefined
பவுலிங்கைப் பொறுத்த வரையில் இந்திய மகளிர் அணியில் ரேணுகா சிங் மற்றும் ராதா யாதவ் இருவரும் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர். பூஜா வஸ்த்ரேகர் மற்றும் தீப்தி சர்மா இருவரும் தலா ஒரு விக்கெட் எடுத்தார். பின்னர் 81 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய இந்திய மகளிர் அணியில் ஷஃபாலி வர்மா மற்றும் ஸ்மிருதி மந்தனா இருவரும் தொடக்க வீராங்கனைகளாக களமிறங்கி அதிரடியாக விளையாடினர்.
Paris Olympics 2024 – நாளை ஜூலை 27, இந்தியா விளையாடும் போட்டிகள் என்னென்ன? முதல் பதக்கம் வெல்லுமா?
இறுதியாக 11 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி இந்திய மகளிர் அணி 83 ரன்கள் குவித்து 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு சென்றுள்ளது. ஷஃபாலி வர்மா 26 ரன்களும், ஸ்மிருதி மந்தனா 55 ரன்களும் எடுத்தனர். வரும் 28ஆம் தேதி இறுதிப் போட்டி நடைபெறுகிறது. 2ஆவது அரையிறுதிப் போட்டி இன்று இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. இதில், இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறும் என்பது குறிப்பிடத்தக்கது.
Sharath Kamal: ஒலிம்பிக்கில் சிந்துவுடன் தேசிய கொடியை ஏந்தி செல்லும் தமிழன்; யார் இந்த சரத் கமல்?