பவுண்டரியும், சிக்ஸருமாக விளாசிய ரஹேஜா, ராதாகிருஷ்ணன் – திருப்பூர் தமிழன்ஸ் 189 ரன்கள் குவிப்பு!

By Rsiva kumar  |  First Published Jul 24, 2024, 10:01 PM IST

நெல்லை ராயல் கிங்ஸ் அணிக்கு எதிரான டிஎன்பிஎல் தொடரின் 23 ஆவது போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ் 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 189 ரன்கள் குவித்துள்ளது.


தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் 23 ஆவது போட்டி தற்போது திருநெல்வேலியில் நடைபெற்று வருகிறது. இதில் நெல்லை ராயல் கிங்ஸ் மற்றும் ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற நெல்லை முதலில் பவுலிங் செய்ததது. அதன்படி முதலில் விளையாடிய திருப்பூர் தமிழன்ஸ் 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 189 ரன்கள் குவித்துள்ளது.

Paris Olympics 2024: பாரிஸ் வந்து இறங்கிய இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் பிடி உஷா!

Tap to resize

Latest Videos

தொடக்க வீரர் அமித் சாத்விக் 0 ரன்னில் வெளியேற, துஷார் ரஹேஜா மற்றும் எஸ் ராதாகிருஷ்ணன் இருவரும் இணைந்து அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தனர். இதில் ரஹேஜா 41 ரன்களுக்கு ஆட்டமிழக்க, ராதாகிருஷ்ணன் அரைசதம் அடித்து ஆட்டமிழந்தார். அதன் பிறகு வந்த பாலசந்தர் அனிருத் 14 ரன்னிலும், முகமது அலி 35 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். கடைசியாக வந்த கணேஷ் 36 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார்.

8ஆர்டிஎம், 5 வருட மெகா ஏலம், 4-6 வீரர்களை தக்க வைக்க அனுமதி கேட்கும் ஐபிஎல் உரிமையாளர்கள்!

இறுதியாக ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ் 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 189 ரன்கள் குவித்துள்ளது. பவுலிங்கைப் பொறுத்த வரையில் நெல்லி அணியில் சிலம்பரசன் 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார். இம்மானுவேல் செரியன், சோனு யாதவ், எஸ் ஹரிஷ், கோகுல் மூர்த்தி ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.

Womens Asia Cup 2024 Prize Money: மகளிர் ஆசிய கோப்பை 2024 தொடருக்கான பரிசுத் தொகை எவ்வளவு?

click me!