மகளிருக்கான ஆசிய கோப்பை 2024 தொடரானது தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த தொடரில் முதல் பரிசு வெல்லும் அணிக்கு தோராயமாக ரூ.16,48,000 பரிசுத் தொகை வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
மகளிருக்கான ஆசிய கோப்பை 2024 தொடரானது கடந்த 19 ஆம் தேதி முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில், 8 அணிகள் குரூப் ஏ மற்றும் குரூப் பி என்று 2 குரூப்களாக பிரிந்து விளையாடி வருகின்றன. இதில் ஒவ்வொரு குரூப்பிலும் உள்ள அணிகள் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். இதில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறும். அதன்படி இந்தியா மகளிர் அணியானது விளையாடிய 3 போட்டியிலும் வெற்றி பெற்று அரையிறுதிப் போட்டிக்கு சென்றுள்ளது. முதல் 2 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் நம்பர் 1 இடத்தில் இருந்தது.
undefined
இதே போன்று பாகிஸ்தான் மகளிர் அணியானது விளையாடிய 3 போட்டிகளில் 2 வெற்றியோடு 2ஆவது அணியாக அரையிறுதிக்கு சென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. நேபாள் மகளிர் அணி மற்றும் ஐக்கிய அரபு நாடுகள் மகளிர் அணியானது தொடரிலிந்து வெளியேறியுள்ளனர். இதே போன்று குரூப் பி பிரிவில் இடம் பெற்றுள்ள மலேசிய மகளிர் அணியானது விளையாடிய 3 போட்டியிலும் தோல்வி அடைந்து தொடரிலிருந்து வெளியேறிவிட்டது. இலங்கை மகளிர் அணி விளையாடிய 2 போட்டியிலும் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் நம்பர் 1 இடத்தில் உள்ளது.
வங்கதேச மகளிர் அணியானது 3 போட்டியிலும் 2ல் வெற்றியும், ஒரு தோல்வியும் அடைந்து புள்ளிப்பட்டியலில் 2ஆவது இடத்தில் உள்ளது. தாய்லாந்து மகளிர் அணி 2ல் ஒரு வெற்றி, ஒரு தோல்வியோடு 3ஆவது இடத்தில் உள்ளது. இந்த நிலையில் தான் கடைசியாக இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் விளையாடுகிறது. இந்தப் போட்டியில் இலங்கை தோல்வி அடைந்தால் தாய்லாந்து மகளிர் அணி 2ஆவது அணியாக அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறும். இந்த நிலையில் தான் மகளிர் ஆசிய கோப்பை தொடரில் வெற்றி பெறும் அணிக்கு பரிசுத் தொகையாக தோராயமாக ரூ.16,48,000 வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.
இதே போன்று 2ஆவது இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.10,30,000 பரிசு தொகை வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. இது தவிர இறுதிப் போட்டியி ஆட்டநாயகன் விருது பெறுபவருக்கு ரூ.82,000 மற்றும் தொடர் நாயகன் விருது பெறுபவருக்கு ரூ.1,64,000 பரிசுத் தொகை வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. இதுவரையில் நடைபெற்ற 8 தொடர்களில் ஒரு முறை மட்டுமே வங்கதேச மகளிர் அணி டிராபியை கைப்பற்றியிருக்கிறது. மற்ற 7 முறையும் இந்திய மகளிர் அணி டிராபி வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.