பாகிஸ்தானை பந்தாடி உலகக் கோப்பையில் முதல் சதம் அடித்த மெண்டிஸ், சமரவிக்ரமா – இலங்கை 344 ரன்கள் குவிப்பு!

By Rsiva kumar  |  First Published Oct 10, 2023, 7:10 PM IST

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 50 ஓவர்களில் 344 ரன்கள் குவித்துள்ளது.


இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டி இன்று ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடந்தது. இதில், டாஸ் வென்ற இலங்கை முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி, இலங்கை அணியில் பதும் நிசாங்கா மற்றும் குசால் பெரேரா இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில், பெரேரா ரன் ஏதும் எடுக்காமல் ஹசன் அலி பந்தில் ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து குசால் மெண்டிஸ் களமிறங்கினார்.

Pakistan vs Sri Lanka: ஒரு விக்கெட் கீப்பராக குமார் சங்கக்காரா சாதனையை முறியடித்த குசால் மெண்டிஸ்!

Tap to resize

Latest Videos

மெண்டிஸ் மற்றும் நிசாங்கா இருவரும் இணைந்து அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தனர். இந்த ஜோடி 2ஆவது விக்கெட்டிற்கு 102 ரன்கள் சேர்த்தது. நிசாங்கா 61 பந்துகளில் 7 பவுண்டரி ஒரு சிக்ஸர் உள்பட 51 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து சதீர சமரவிக்ரமா களமிறங்கினார். ஒரு புறம் அதிரடியாக விளையாடி வந்த குசால் மெண்டிஸ் சிக்ஸர் அடித்து உலகக் கோப்பையில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். அதுமட்டுமின்றி இலங்கை அணிக்காக அதிவேகமாக சதம் அடித்த வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.

ஸ்குவாஷ், கிரிக்கெட்டில் முதல் முறையாக இந்தியா தங்கம் வென்றது – பதக்கம் வென்ற வீரர்களுடன் மோடி உரையாடல்!

மெண்டிஸ் 65 பந்துகளில் சதம் அடித்து சாதனை படைத்தார். அதன் பிறகு தொடர்ந்து சிக்ஸரும் பவுண்டரியும் அடிக்க இலங்கை அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. ஒரு கட்டத்தில் ஹசன் அலி ஓவரில் அடுத்தடுத்து 2 சிக்ஸர்கள் பறக்கவிட்டார். மூன்றாவது சிக்ஸருக்கு முயற்சித்த நிலையில், கேட்ச் கொடுத்து வெளியேறினார். மெண்டிஸ் 77 பந்துகளில் 14 பவுண்டரி மற்றும் 6 சிக்ஸர்கள் உள்பட 122 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

உலகக் கோப்பை வரலாற்றில் முதல் முறை: அதிவேக சதம் அடித்து குசால் மெண்டிஸ் சாதனை!

இதே போன்று சமரவிக்ரமாவும் தன் பங்கிற்கு அதிரடியாக விளையாடி ரன்கள் சேர்த்தார். அவரும் உலகக் கோப்பையில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். அவர் 89 பந்துகளில் 11 பவுண்டரி 2 சிக்ஸர் உள்பட 108 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். அதன் பிறகு வந்த தனன்ஜெயா டி சில்வா 25 ரன்களில் ஆட்டமிழந்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்கவே இலங்கை 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 344 ரன்கள் குவித்தது.

ஷாருக்கானின் ஜவான் கெட்டப்பில் வந்து டயலாக் பேசும் ஷிகர் தவான் – வைரலாகும் வீடியோ!

இதன் மூலமாக உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக இலங்கை அதிக ரன்களை குவித்துள்ளது. மேலும், உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இலங்கை 3ஆவது அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்துள்ளது. உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக இங்கிலாந்தைத் தொடர்ந்து இலங்கை அணியிலும் 2 வீரர்கள் சதம் அடித்துள்ளனர்.

பாகிஸ்தானைப் பொறுத்த வரையில் பந்து வீச்சில் ஹசன் அலி 4 விக்கெட்டும், ஹரிஷ் ராஃப் 2 விக்கெட்டும், ஷகீன் அஃப்ரிடி, முகமது நவாஸ் மற்றும் ஷதாப் கான் ஆகியோர் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.

ENG vs BAN: உலகக் கோப்பையில் முதல் சதம் அடித்த டேவிட் மலான், ரூட் அரைசதம் – இங்கிலாந்து 364 ரன்கள் குவிப்பு!

ஒருநாள் போட்டிகளில் விக்கெட் கீப்பராக பாகிஸ்தானுக்கு எதிராக அதிக ரன்கள்:

122 ரன்கள் – குசால் மெண்டிஸ் – ஹைதராபாத் – 2023*

112 ரன்கள் – குமார் சங்கக்காரா – கராச்சி – 2023

97 ரன்கள் – குமார் சங்கக்காரா – கொழும்பு – 2012

91 ரன்கள் – குசால் மெண்டிஸ் – கொழும்பு - 2023

இலங்கைக்காக நியமிக்கப்பட்ட விக்கெட் கீப்பராக ODI சதங்கள்:

23 - குமார் சங்கக்காரா

2 – ரமேஷ் களுவிதரணா

2 - தினேஷ் சண்டிமால்

2 - நிரோஷன் டிக்வெல்லா

1 - குசால் பெரேரா

1 - குசால் மெண்டிஸ்

உலகக் கோப்பையில் இலங்கை விக்கெட் கீப்பரின் அதிகபட்ச ஸ்கோர்கள்:

124 - குமார் சங்கக்காரா vs ஸ்காட்லாந்து, ஹோபார்ட், 2015

122 - குசால் மெண்டிஸ் vs பாகிஸ்தான், ஹைதராபாத், 2023*

117* - குமார் சங்கக்காரா vs இங்கிலாந்து, வெலிங்டன், 2015

117 - குமார் சங்கக்காரா vs நியூசிலாந்து, மும்பை WS, 2011

Shubman Gill: சுப்மன் கில் சென்னையிலுள்ள மருத்துவமனையில் அனுமதி – பாகிஸ்தான் போட்டியில் இடம் பெற வாய்ப்பில்லை!

உலகக் கோப்பையில் இலங்கை அணியின் அதிகபட்ச ஸ்கோர்:

398/5 vs கென்யா, கண்டி, 1996

363/9 vs ஸ்காட்லாந்து, ஹோபர்ட், 2015

344/9 vs பாகிஸ்தான், ஹைதராபாத், 2023*

338/6 vs வெஸ்ட் இண்டீஸ், செஸ்டர்-லீ-ஸ்ட்ரீட், 2019

உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக இலங்கையின் அதிகபட்ச ஸ்கோர்:

344/9 – இலங்கை – ஹைதராபாத், 2023*

336/5 – இந்தியா - மான்செஸ்ட்ர, 2019

334/9 – இங்கிலாந்து – நாட்டிங்காம் 2019

310/8 – ஆஸ்திரேலியா – ஜோகன்னஸ்பர்க் 2003

உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக 2 வீரர்கள் சதம்:

ஜோ ரூட் (107), ஜோஸ் பட்லர் (103), நாட்டிங்காம் – 2019 உலகக் கோப்பை

குசால் மெண்டிஸ் (122 ரன்கள்), சதீர சமரவிக்ரமா (108 ரன்கள்), ஹைதராபாட் – 2023

click me!