பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இலங்கை வீரர் விக்கெட் கீப்பரான குசால் மெண்டிஸ் சதம் அடித்ததன் மூலமாக குமார் சங்கக்காரா 112 ரன்கள் சாதனையை முறியடித்துள்ளார்.
இலங்கை மற்றும் பாகிஸ்தான் இடையிலான உலகக் கோப்பை கிரிக்கெட்டின் 8ஆவது லீக் போட்ட் தற்போது ஹைதராபாத் மைதானத்தில் நடந்து வருகிறது. இதில், டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் தசுன் ஷனாகா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். அதன்படி, இலங்கை அணியில் பதும் நிசாங்கா மற்றும் குசால் பெரேரா இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில், பெரேரா ரன் ஏதும் எடுக்காமல் ஹசன் அலி பந்தில் ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து குசால் மெண்டிஸ் களமிறங்கினார்.
மெண்டிஸ் மற்றும் நிசாங்கா இருவரும் இணைந்து அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தனர். இந்த ஜோடி 2ஆவது விக்கெட்டிற்கு 102 ரன்கள் சேர்த்தது. நிசாங்கா 61 பந்துகளில் 7 பவுண்டரி ஒரு சிக்ஸர் உள்பட 51 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து சதீர சமரவிக்ரமா களமிறங்கினார். ஒரு புறம் அதிரடியாக விளையாடி வந்த குசால் மெண்டிஸ் சிக்ஸர் அடித்து உலகக் கோப்பையில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். அதுமட்டுமின்றி இலங்கை அணிக்காக அதிவேகமாக சதம் அடித்த வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார். மெண்டிஸ் 65 பந்துகளில் சதம் அடித்து சாதனை படைத்தார்.
உலகக் கோப்பை வரலாற்றில் முதல் முறை: அதிவேக சதம் அடித்து குசால் மெண்டிஸ் சாதனை!
அதன் பிறகு தொடர்ந்து சிக்ஸரும் பவுண்டரியும் அடிக்க இலங்கை அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. ஒரு கட்டத்தில் ஹசன் அலி ஓவரில் அடுத்தடுத்து 2 சிக்ஸர்கள் பறக்கவிட்டார். மூன்றாவது சிக்ஸருக்கு முயற்சித்த நிலையில், கேட்ச் கொடுத்து வெளியேறினார். மெண்டிஸ் 77 பந்துகளில் 14 பவுண்டரி மற்று 6 சிக்ஸர்கள் உள்பட 122 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
இந்தப் போட்டியில் 122 ரன்கள் எடுத்ததன் மூலமாக ஒரு விக்கெட் கீப்பராக பாகிஸ்தான் அணிக்கு எதிராக இலங்கை அணியின் முன்னாள் வீரர் குமார் சங்கக்காராவின் 112 ரன்கள் சாதனையை முறியடித்துள்ளார்.
ஷாருக்கானின் ஜவான் கெட்டப்பில் வந்து டயலாக் பேசும் ஷிகர் தவான் – வைரலாகும் வீடியோ!
ஒருநாள் போட்டிகளில் விக்கெட் கீப்பராக பாகிஸ்தானுக்கு எதிராக அதிக ரன்கள்:
122 ரன்கள் – குசால் மெண்டிஸ் – ஹைதராபாத் – 2023*
112 ரன்கள் – குமார் சங்கக்காரா – கராச்சி – 2023
97 ரன்கள் – குமார் சங்கக்காரா – கொழும்பு – 2012
91 ரன்கள் – குசால் மெண்டிஸ் – கொழும்பு - 2023
இலங்கைக்காக நியமிக்கப்பட்ட விக்கெட் கீப்பராக ODI சதங்கள்:
23 - குமார் சங்கக்காரா
2 – ரமேஷ் களுவிதரணா
2 - தினேஷ் சண்டிமால்
2 - நிரோஷன் டிக்வெல்லா
1 - குசால் பெரேரா
1 - குசால் மெண்டிஸ்
உலகக் கோப்பையில் இலங்கை விக்கெட் கீப்பரின் அதிகபட்ச ஸ்கோர்கள்:
124 - குமார் சங்கக்காரா vs ஸ்காட்லாந்து, ஹோபார்ட், 2015
122 - குசால் மெண்டிஸ் vs பாகிஸ்தான், ஹைதராபாத், 2023*
117* - குமார் சங்கக்காரா vs இங்கிலாந்து, வெலிங்டன், 2015
117 - குமார் சங்கக்காரா vs நியூசிலாந்து, மும்பை WS, 2011