பாகிஸ்தான் அணிக்கு எதிரான உலகக் கோப்பை 8ஆவது லீக் போட்டியில் குசால் மெண்டிஸ் சதம் அடித்ததன் மூலமாக இலங்கை அணிக்காக அதிவேகமாக சதம் அடித்த முதல் இலங்கை வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
இலங்கை மற்றும் பாகிஸ்தான் இடையிலான உலகக் கோப்பை கிரிக்கெட்டின் 8ஆவது லீக் போட்ட் தற்போது ஹைதராபாத் மைதானத்தில் நடந்து வருகிறது. இதில், டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் தசுன் ஷனாகா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். அதன்படி, இலங்கை அணியில் பதும் நிசாங்கா மற்றும் குசால் பெரேரா இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில், பெரேரா ரன் ஏதும் எடுக்காமல் ஹசன் அலி பந்தில் ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து குசால் மெண்டிஸ் களமிறங்கினார்.'
ஷாருக்கானின் ஜவான் கெட்டப்பில் வந்து டயலாக் பேசும் ஷிகர் தவான் – வைரலாகும் வீடியோ!
மெண்டிஸ் மற்றும் நிசாங்கா இருவரும் இணைந்து அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தனர். இந்த ஜோடி 2ஆவது விக்கெட்டிற்கு 102 ரன்கள் சேர்த்தது. நிசாங்கா 61 பந்துகளில் 7 பவுண்டரி ஒரு சிக்ஸர் உள்பட 51 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து சதீர சமரவிக்ரமா களமிறங்கினார். ஒரு புறம் அதிரடியாக விளையாடி வந்த குசால் மெண்டிஸ் சிக்ஸர் அடித்து உலகக் கோப்பையில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். அதுமட்டுமின்றி இலங்கை அணிக்காக அதிவேகமாக சதம் அடித்த வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார். மெண்டிஸ் 65 பந்துகளில் சதம் அடித்து சாதனை படைத்தார்.
அதன் பிறகு தொடர்ந்து சிக்ஸரும் பவுண்டரியும் அடிக்க இலங்கை அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. ஒரு கட்டத்தில் ஹசன் அலி ஓவரில் அடுத்தடுத்து 2 சிக்ஸர்கள் பறக்கவிட்டார். மூன்றாவது சிக்ஸருக்கு முயற்சித்த நிலையில், கேட்ச் கொடுத்து வெளியேறினார். மெண்டிஸ் 77 பந்துகளில் 14 பவுண்டரி மற்று 6 சிக்ஸர்கள் உள்பட 122 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இதற்கு முன்னதாக தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான முதல் போட்டியில் மெண்டிஸ் 42 பந்துகளில் 4 பவுண்டரி மற்றும் 8 சிக்ஸர்கள் உள்பட 76 ரன்களில் ஆட்டமிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரைத் தொடர்ந்து சரித் அசலங்கா களமிறங்கினார்.
தற்போது வரையில் இலங்கை 29 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 218 ரன்கள் எடுத்துள்ளது.
ஒருநாள் உலகக் கோப்பைகளில் அதிவேக சதம் (பந்துகள் மூலம்):
49 - எய்டன் மார்க்ரம் vs இலங்கை, டெல்லி, 2023*
50 - கெவின் ஓ பிரையன் vs இங்கிலாந்து, பெங்களூரு, 2011
51 - க்ளென் மேக்ஸ்வெல் vs இலங்கை, சிட்னி, 2015
52 - ஏபி டி வில்லியர்ஸ் vs வெஸ்ட் இண்டீஸ், சிட்னி 2015
57 - இயான் மோர்கன் vs ஆப்கானிஸ்தான், மான்செஸ்டர் 2019
65 - குசால் மெண்டிஸ் vs பாகிஸ்தான், ஹைதராபாத் 2023*
Kusal Mendis scores the fastest ever hundred for Sri Lanka in ICC Cricket World Cup history. pic.twitter.com/umsdT6WXCj
— Mufaddal Vohra (@mufaddal_vohra)