ENG vs BAN: உலகக் கோப்பையில் முதல் சதம் அடித்த டேவிட் மலான், ரூட் அரைசதம் – இங்கிலாந்து 364 ரன்கள் குவிப்பு!

By Rsiva kumar  |  First Published Oct 10, 2023, 3:07 PM IST

வங்கதேச அணிக்கு எதிரான உலகக் கோப்பையின் 7ஆவது லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 364 ரன்கள் குவித்துள்ளது.


இங்கிலாந்து மற்றும் வங்கதேசம் இடையிலான 7ஆவது லீக் போட்டி தரம்சாலாவில் நடந்து வருகிறது. இதில், டாஸ் வென்று வங்கதேசம் முதலில் பந்து வீசியது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணியில் ஜானி பேர்ஸ்டோவ் மற்றும் டேவிட் மலான் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 115 ரன்கள் சேர்த்தனர். பேர்ஸ்டோவ் 59 பந்துகளில் 8 பவுண்டரி உள்பட 52 ரன்கள் சேர்த்தார்.

Pakistan vs Sri Lanka: தீக்‌ஷனாவை களமிறக்கிய இலங்கை – டாஸ் வென்று பேட்டிங்; முதல் வெற்றி பெறுமா Sri Lanka?

Tap to resize

Latest Videos

அதன் பிறகு மலான் உடன் ஜோ ரூட் இணைந்தார். ஏற்கனவே முதல் போட்டியில் அரைசதம் அடித்த ரூட் இந்தப் போட்டியில் அரைசதம் அடித்துள்ளார். ஒருபுறம் மலான் உலகக் கோப்பையில் தனது முதல் சதம் அடித்தார். அதோடு, ஒரு நாள் போட்டியில் 6ஆவது சதத்தை பதிவு செய்துள்ளார். தொடர்ந்து விளையாடிய மலான் 107 பந்துகளில் 16 பவுண்டரி 5 சிக்ஸர்கள் உள்பட 142 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இன்னும் ஒரு 11 ரன்கள் எடுத்திருந்தால் நியூசிலாந்து வீரர் டெவான் கான்வேயின் 152 ரன்கள் சாதனையை முறியடித்திருப்பார்.

Shubman Gill: ஒரு இரவு மட்டும் மருத்துவமனையில் சிகிச்சை – டிஸ்ஜார்ஜ் செய்யப்பட்ட சுப்மன் கில் ஹோட்டலில் ஓய்வு!

ரூட் 68 பந்துகளில் ஒரு சிக்ஸர் 8 பவுண்டரி உள்பட 82 ரன்களில் வெளியேறினார். அதன் பிறகு வந்தவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்கவே இறுதியாக இங்கிலாந்து 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 364 ரன்கள் குவித்தது. வங்கதேச அணியைப் பொறுத்த வரையில், பந்து வீச்சில் மெஹடி ஹசன் 4 விக்கெட்டும், ஷோரிஃபுல் இஸ்லாம் 3 விக்கெட்டும் கைப்பற்றினர். தஸ்கின் அகமது, ஷாகிப் அல் ஹசன் ஆகியோர் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.

Shubman Gill: சுப்மன் கில் சென்னையிலுள்ள மருத்துவமனையில் அனுமதி – பாகிஸ்தான் போட்டியில் இடம் பெற வாய்ப்பில்லை!

click me!