பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பையின் 8ஆவது லீக் போட்டி இன்று பிற்பகல் 2 மணிக்கு நடக்கிறது.
இலங்கை மற்றும் பாகிஸ்தான் இடையிலான கிரிக்கெட் உலகக் கோப்பையின் 8ஆவது லீக் போட்டி இன்று பிற்பகல் 2 மணிக்கு ஹைதராபாத் மைதானத்தில் நடக்கிறது. ஏற்கனவே நெதர்லாந்துக்கு எதிரான போட்டியிலும் பாகிஸ்தான் வெற்றி பெற்றது. இதே போன்று தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான போட்டியில் இலங்கை 102 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
England vs Bangladesh: மொயீன் அலி இல்லை – டாஸ் வென்ற வங்கதேசம் பீல்டிங்!
இதற்கு முன்னதாக இரு அணிகளும் 156 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ளன. இதில், பாகிஸ்தான் 92 போட்டிகளிலும் இலங்கை 59 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. சமீபத்தில் நடந்து முடிந்த ஆசிய கோப்பை போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான முக்கியமான போட்டியில் டக் ஒர்த் லீவிஸ் முறைப்படி இலங்கை 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு சென்றது.
பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் உலகக் கோப்பையில் மட்டும் 8 போட்டிகளில் விளையாடியுள்ளன. இதில், பாகிஸ்தான் 7 போட்டியில் வெற்றி கண்டுள்ளது. ஒரு போட்டிக்கு முடிவு இல்லை. ஆனால், இலங்கை ஒரு போட்டியில் கூட வெற்றி பெறவில்லை.
இலங்கை – பாகிஸ்தான் உலகக் கோப்பை ரெக்கார்ட்ஸ்:
1975 - 192 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி – நாட்டிங்காம்
1983 - 50 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி - ஸ்வான்சீ
1983 - 15 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி - லீட்ஸ்
1987 - 11 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி – ஹைதராபாத்
1987 - 13 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி – ஃபைசலாபாத்
1992 – 4 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி – பெர்த்
2011 - 11 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி - கொழும்பு
2019 – மழையால் போட்டி ரத்து – பிரிஸ்டல்
முந்தைய சாதனைகளின் படி இன்று நடக்கும் போட்டியிலும் பாகிஸ்தான் அணி வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
England vs Bangladesh: முதல் வெற்றி பெறுமா இங்கிலாந்து? வங்கதேச அணியுடன் பலப்பரீட்சை!