இரத்தத்தில் உள்ள பிளேட்லெட் அளவு குறைந்ததைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சுப்மன் கில் மருத்துமனைவியிலிருந்து டிஸ்ஜார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.
உலகக் கோப்பை வார்ம் அப் போட்டிக்காக இந்திய அணி திருவனந்தபுரம் சென்றிருந்தது. நெதர்லாந்து அணிக்கு எதிரான அந்த வார்ம் அப் போட்டியானது மழையால் பாதிக்கப்படவே போட்டி கைவிடப்பட்டது. இதையடுத்து இந்திய வீரர்கள் சென்னை திரும்பினர். அப்போது சுப்மன் கில்லிற்கு கடுமையான காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் மருத்துவ பரிசோதனைக்கு சென்றுள்ளார். இதில் கில்லிற்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
England vs Bangladesh: முதல் வெற்றி பெறுமா இங்கிலாந்து? வங்கதேச அணியுடன் பலப்பரீட்சை!
இதன் காரணமாக மருத்துவ கண்காணிப்பில் இருந்த சுப்மன் கில் கடந்த 8ஆம் தேதி சென்னையில் நடந்த ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 5ஆவது லீக் போட்டியில் இடம் பெறவில்லை. அவருக்குப் பதிலாக இஷான் கிஷான் இடம் பெற்றார். எனினும், இந்தப் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதையடுத்து நாளை 11 ஆம் தேதி டெல்லியில் உள்ள ராஜீவ்காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடக்க உள்ள ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 9 ஆவது லீக் போட்டியில் விளையாடுவதற்காக இந்திய அணி நேற்று டெல்லி புறப்பட்டுச் சென்றது. அதில், சுப்மன் கில் இடம் பெறவில்லை. இந்த நிலையில் தான் சுப்மன் கில்லிற்கு இரத்தத்தில் உள்ள பிளேட்லெட் எண்ணிக்கை ஒரு மைக்ரோலிட்டருக்கு 1,00,000 க்கும் கீழே குறைந்துள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த 8ஆம் தேதி இரவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.
ஒரே ஒரு நாள் இரவு மட்டும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உடனடியாக மருத்துவமனையிலிருந்து டிஸ்ஜார்ஜ் செய்யப்பட்டுள்ளார். சென்னையில் உள்ள ஹோட்டல் அறையில் சுப்மன் கில் ஓய்வு எடுத்து வருவதாக தகவல் தெரிவிக்கின்றது. ஏற்கனவே ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் இடம் பெறாத சுப்மன் கில் நாளை நடக்க உள்ள ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியிலும் இடம் பெற வாய்ப்பில்லை.
இந்த நிலையில், பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியிலும் சுப்மன் கில் இடம் பெறுவது என்பது கேள்விக்குறியாகியுள்ளது. தற்போது ஓய்வில் இருக்கும் கில் இன்னும் தனது பயிற்சியை தொடங்கவில்லை. ஆதலால், உடல்நிலை மற்றும் பயிற்சி ஆகியவற்றைப் பொறுத்து தான் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இடம் பெறுவது குறித்து தெரிய வரும் என்பது குறிப்பிடத்தக்கது.
வில் யங், ரச்சின் ரவீந்திரா, டாம் லாதம் அரைசதம் – நியூசிலாந்து 322 ரன்கள் குவிப்பு!