இந்திய அணியின் நட்சத்திர வீரர் சுப்மன் கில் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்திய அணியில் நம்பிக்கை நட்சத்திரமான வளர்ந்து வரும் ஸ்டார் பிளேயர் சுப்மன் கில் கடந்த சில நாட்களாக டெங்குவால் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். திருவனந்தரபுரத்திலிருந்து சென்னை வந்த போது சுப்மன் கில் கடுமையான காய்ச்சலால் அவதிப்பட்டுள்ளார். இதையடுத்து அவருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொண்டதில் டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதன் காரணமாக சுப்மன் கில், சென்னையில் நடந்த ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 5ஆவது உலகக் கோப்பை லீக் போட்டியில் இடம் பெறவில்லை. தொடர்ந்து அவர் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்தார்.
England vs Bangladesh: முதல் வெற்றி பெறுமா இங்கிலாந்து? வங்கதேச அணியுடன் பலப்பரீட்சை!
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து நாளை டெல்லியில் நடக்க உள்ள ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டிக்காக இந்திய அணி வீரர்கள் நேற்று டெல்லி புறப்பட்டுச் சென்றனர். இதில், சுப்மன் கில் செல்லவில்லை. மாறாக, அவர் மருத்துவ குழுவினரின் கண்காணிப்பில் இருந்துள்ளார். இதன் காரணமாக அவர் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இடம் பெறமாட்டார் என்பது தெளிவாகியுள்ளது.
இந்த நிலையில், தான் கில்லிற்கு இரத்தத்திலுள்ள பிளேட்லெட்டுகளின் எண்ணிக்கை குறைந்ததைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உடனடியாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதன் காரணமாக வரும் 14 ஆம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடக்க உள்ள பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் கில் இடம் பெறுவாரா என்பது கேள்விக்குறியாகியுள்ளது.