நெதர்லாந்துக்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து 99 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
நியூசிலாந்து மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான 6ஆவது லீக் போட்டி இன்று ஹைதராபாத் மைதானத்தில் நடந்தது. இதில், முதலில் டாஸ் வென்ற நெதர்லாந்து பந்து வீச்சு தேர்வு செய்தது. அதன்படி, நியூசிலாந்து பேட்டிங் ஆடியது. இதில், தொடக்க வீரர் டெவான் கான்வே 32 ரன்களில் ஆட்டமிழக்க, மற்றொரு தொடக்க வீரர் வில் யங் 80 பந்துகளில் 70 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். ரச்சின் ரவீந்திரா 51 ரன்களில் வெளியேற டேரில் மிட்செல் 48 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கேப்டன் டாம் லாதம் 53 ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதியாக மிட்செல் சாண்ட்னர் தனது அதிரடி ஆட்டத்தை காட்டவே நியூசிலாந்து 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 322 ரன்கள் குவித்தது. இதில், சாண்ட்னர் 17 பந்துகளில் 3 பவுண்டரி 2 சிக்சர்கள் உள்பட 36 ரன்கள் எடுத்தார்.
பின்னர், கடின இலக்கை துரத்திய நெதர்லாந்து அணிக்கு தொடக்க வீரர்களான விக்ரம்ஜீத் சிங் 12 ரன்களிலும், மேக்ஸ் ஓடவுட் 16 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த கொலின் அக்கர்மேன் நிதானமாக விளையாடி 63 ரன்கள் எடுத்தார். இவரைத் தொடர்ந்து வந்த பாஸ் டி லீட் 18, தேஜா நிடமானுரு 21, கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் 30 ரன்னும் எடுத்தனர். இதே போன்று சைப்ரண்ட் ஏங்கல்பிரெக்ட் 29 ரன்கள் சேர்த்தார். அடுத்து வந்தவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இறுதியாக நெதர்லாந்து 46.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 223 ரன்கள் மட்டுமே எடுத்து 99 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இதன் மூலமாக நெதர்லாந்து 2 போட்டிகளில் விளையாடி 2 போட்டியிலும் தோல்வி அடைந்துள்ளது.
வில் யங், ரச்சின் ரவீந்திரா, டாம் லாதம் அரைசதம் – நியூசிலாந்து 322 ரன்கள் குவிப்பு!
பந்து வீச்சில் நியூசிலாந்து அணியின் மிட்செல் சாண்ட்னர் 5 விக்கெட் கைப்பற்றினார். மேட் ஹென்றி 3 விக்கெட்டும், ரச்சின் ரவீந்திரா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர். நியூசிலாந்து 2 போட்டிகளில் விளையாடி 2 போட்டியிலும் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 4 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. வரும் 13 ஆம் தேதி சென்னையில் நடக்கும் போட்டியில் நியூசிலாந்து அணி வங்கதேச அணியை எதிர்கொள்கிறது. இதே போன்று வரும் 17 ஆம் தேதி தரமசாலாவில் நடக்கும் போட்டியில் நெதர்லாந்து அணியானது தென் ஆப்பிரிக்கா அணியை எதிர்கொள்கிறது.
ஹாட்ஸ்டார், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தை விற்க முடிவு – சன் டிவி, கௌதம் அதானியிடம் பேச்சுவார்த்தை!