இங்கிலாந்துக்கு எதிரான உலகக் கோப்பை 7ஆவது லீக் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணியின் கேப்டன் ஷாகில் அப் ஹசன் பீல்டிங் தேர்வு செய்துள்ளார்.
கிரிக்கெட் உலகக் கோப்பையில் ஒவ்வொரு அணிகளுக்கும் முதல் போட்டிகள் முடிந்த நிலையில் 2ஆவது போட்டிகள் தொடங்கி நடந்து வருகிறது. இதில், இன்று நடக்கும் போட்டியில் இங்கிலாந்து மற்றும் வங்கதேச அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டி தற்போது தொடங்கியுள்ளது. இதில், டாஸ் வென்ற வங்கதேச அணியின் கேப்டன் ஷாகில் அப் ஹசன் பீல்டிங் தேர்வு செய்துள்ளார். அதன்படி இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்து வருகிறது. இங்கிலாந்து அணியில் சிறந்த ஆல்ரவுண்டரான மொயீன் அலிக்குப் பதிலாக ரீஸ் டாப்ளி அணியில் இடம் பெற்றுள்ளார்.
இங்கிலாந்து:
ஜானி பேர்ஸ்டோவ், டேவிட் மலான், ஜோ ரூட், ஹாரி ப்ரூக், ஜோஸ் பட்லர் (கேப்டன்/விக்கெட் கீப்பர்), லியாம் லிவிங்ஸ்டன், சாம் கரண், கிறிஸ் வோக்ஸ், அடில் ரஷீத், மார்க் வுட், ரீஸ் டாப்ளி
வங்கதேசம்:
தன்ஷித் ஹசன், லிட்டன் தாஸ், நஜ்முல் ஹூசைன் ஷாண்டோ, ஷாகிப் அல் ஹசன் (கேப்டன்), மெஹிடி ஹசன் மிராஸ், முஷ்பிகுர் ரஹீம் (விக்கெட் கீப்பர்), தவ்ஹித் ஹிரிடோய், ஷாக் மஹதி ஹசன், தஸ்கின் அகமது, ஷோரிஃபுல் இஸ்லாம், முஸ்தஃபிஜூர் ரஹ்மான்.
England vs Bangladesh: முதல் வெற்றி பெறுமா இங்கிலாந்து? வங்கதேச அணியுடன் பலப்பரீட்சை!
ஏற்கனவே நடந்து முடிந்த ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டியில் வங்கதேச அணி வெற்றி பெற்றது. இதே போன்று நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து தோல்வியை தழுவியது. இதுவரையில் இரு அணிகளும் 24 ஒரு நாள் போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில், இங்கிலாந்து 19 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. வங்கதேச அணி 5 போட்டிகளில் வெற்றி கண்டுள்ளது. கடைசியாக நடந்த 5 போட்டிகளில் இங்கிலாந்து 4 போட்டிகளிலும், வங்கதேச அணி ஒரு போட்டியிலும் வெற்றி கண்டுள்ளன.
இதே உலகக் கோப்பையில் நடந்த 4 போட்டிகளில் இரு அணிகளும் 2-2 என்று வெற்றி பெற்றுள்ளன. இன்று உலகக் கோப்பையில் 5ஆவது ஒரு நாள் போட்டியில் இரு அணிகளும் விளையாடுகின்றன.
இங்கிலாந்து – வங்கதேசம் அதிகபட்சம் மற்றும் குறைந்தபட்ச ஸ்கோர்:
அதிகமாக – 391/4 (50 ஓவர்) - 168 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி – 2005
குறைந்த ரன் - 196 (43.1) - 50 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து தோல்வி -2023
வங்கதேச அதிக ரன் - 305/6 (50) – வங்கதேசம் 8 விக்கெட்டுகளில் தோல்வி – 2017
வங்கதேச குறைந்த ஸ்கோர் - 134 (50) – வங்கதேசம் 7 விக்கெட்டுகளில் தோல்வி – 2003
இங்கிலாந்து தனி வீரர் அதிக ஸ்கோர் – ஆண்ட்ரூ ஸ்ட்ராஸ் -154 ரன்கள் (140 பந்துகள்)
இங்கிலாந்து சிறந்த பவுலிங் - பால் கோலிங்வுட் - 6/31
வங்கதேசம் தனி நபர் அதிக ஸ்கோர் – தமீம் இக்பால் – 128 ரன்கள் (142)
வங்கதேசம் சிறந்த பவுலிங் - மஷ்ரஃப் மோர்டாசா – 4/29
இங்கிலாந்து – வங்கதேசம் அதிகபட்சம் ஸ்கோர்:
முஷ்பிகுர் ரஹீம் (வங்கதேசம்) – 15 போட்டிகள் – மொத்த ஸ்கோர் – 575 – அதிகபட்சம் 89 ரன்கள்
தமீம் இக்பால் (வங்கதேசம்) – 17 போட்டிகள் – 557 ரன்கள் – 128 ரன்கள்
இங்கிலாந்து – வங்கதேசம் அதிக விக்கெட்டுகள்:
ஷாகீப் அல் ஹசன் – 17 போட்டிகள் – 20 விக்கெட்டுகள்
அடில் ரஷீத் – 7 போட்டிகள் – 19 விக்கெட்டுகள்
தரமசாலா மைதான போட்டிகள்:
மொத்தப் போட்டிகள் - 5
முதலில் பேட்டிங் செய்த போட்டிகளில் வெற்றி - 1
2ஆவது பேட்டிங் செய்த போட்டிகளில் வெற்றி - 4
சராசரி முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் - 202
சராசரி 2வது இன்ஸ் ஸ்கோர் - 192
அதிகபட்ச ஸ்கோர் - IND vs WI - 330/6 (50 ஓவர்கள்)
குறைந்தபட்ச ஸ்கோர் - IND vs SL - 112/10 (38.2 ஓவர்கள்)
சேஸ் செய்யப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் 227/3 (47.2 ஓவரள்) ENG vs IND
வில் யங், ரச்சின் ரவீந்திரா, டாம் லாதம் அரைசதம் – நியூசிலாந்து 322 ரன்கள் குவிப்பு!
எதிர்பார்ப்பு:
இங்கிலாந்துக்காக அதிக ரன்களை எடுப்பவர்: ஜானி பேர்ஸ்டோ / ஜோஸ் பட்லர்
இங்கிலாந்துக்காக அதிக விக்கெட்டுகளை எடுப்பவர்: மார்க் வுட் / அடில் ரஷித்
வங்கதேச அணிக்காக அதிக ரன்களை எடுப்பவர்: லிட்டன் தாஸ் / நஜ்முல் ஹூசைன் ஷாண்டோ
வங்கதேச அணிக்காக அதிக விக்கெட்டுகளை எடுப்பவர்: ஷகிப் அல் ஹசன் / மெஹிதி ஹசன்