2023 உலகக் கோப்பை கிரிக்கெட்டில் முதல் அணியாக ஹாட்ரிக் தோல்வி அடைந்த இலங்கை!

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 14ஆவது லீக் போட்டியில் இலங்கை தோல்வி அடைந்ததன் மூலமாக 2023 உலகக் கோப்பை கிரிக்கெட்டில் முதல் அணியாக இலங்கை ஹாட்ரிக் தோல்வி அடைந்துள்ளது.


இலங்கை மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பையின் 14ஆவது லீக் போட்டி இன்று லக்னோ மைதானத்தில் நடந்தது. இதில், முதலில் இலங்கை டாஸ் வென்று பேட்டிங் விளையாடியது. தொடக்க வீரர்கள் பதும் நிசாங்கா மற்றும் குசால் பெரேரா நிதானமாகவும், பொறுமையாகவும் விளையாடி ரன்கள் சேர்த்தனர். இந்த ஜோடி முதல் விக்கெட்டிற்கு 125 ரன்கள் சேர்த்தது.

அப்பாடா, ஒரு வழியா ஜெயிச்சிட்டோம் – நிம்மதி பெருமூச்சு விட்ட ஆஸ்திரேலியா – ஹாட்ரிக் தோல்வியில் இலங்கை!

Latest Videos

ஆனால், அதன் பிறகு வந்த வீரர்கள் ஒற்றைப்படை இலக்க ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். இறுதியாக சரித் அசலங்கா கடைசி விக்கெட்டாக 25 ரன்களில் ஆட்டமிழக்க இலங்கை 43.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 209 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஆஸ்திரேலியா அணியில் ஆடம் ஜம்பா 4 விக்கெட்டுகளும், பேட் கம்மின்ஸ் மற்றும் மிட்செல் ஸ்டார்க் ஆகியோர் தலா 2 விக்கெட்டும், கிளென் மேக்ஸ்வெல் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர். பின்னர் எளிய இலக்கை துரத்திய ஆஸ்திரேலியா அணிக்கு டேவிட் வார்னர் 11 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஸ்டீவ் ஸ்மித் டக் அவுட் முறையில் வெளியேறினார்.

ஒரு சூறாவளி கிளம்பியதே - லக்னோவில் காற்றுக்கு விழுந்த கம்பியுடன் கூடிய பேனர் – உயிர் தப்பிய ரசிகர்கள்!

அதன் பிறகு மிட்செல் மார்ஷ் மற்றும் மார்னஷ் லபுஷேன் இருவரும் நிதானமாக விளையாடினர். இதில், மிட்செல் மார்ஷ் ஆஸ்திரேலியா அணிக்காக இந்த உலகக் கோப்பையில் முதல் அரைசதம் அடித்தார். அவர் 52 ரன்களில் ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார். அடுத்து லபுஷேன் 40 ரன்களில் வெளியேறினார். அதன் பிறகு வந்த ஜோஷ் இங்கிலிஸ் 59 பந்துகளில் ஒரு சிக்ஸர்கள் 5 பவுண்டரிகள் உள்பட 58 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்த உலகக் கோப்பையில் தனது முதல் அரைசதத்தை பதிவு செய்தார்.

Australia vs Sri Lanka: ஆடம் ஜம்பா சுழலில் சிக்கிய இலங்கை – கடைசி 32 ரன்னுக்கு 5 விக்கெட்!

கடைசியாக கிளென் மேக்ஸ்வெல் மற்றும் மார்கஸ் ஸ்டோய்னிஸ் இருவரும் இணைந்து ஆஸ்திரேலியா அணியை வெற்றிப் பாதைக்க் அழைத்துச் சென்றனர். ஆஸ்திரேலியா 35.2 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 209 ரன்கள் குவித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2023 உலகக் கோப்பையில் முதல் முறையாக வெற்றி பெற்றது. இதன் மூலமாக ஆஸ்திரேலியா ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை புள்ளிப்பட்டியலில் 8ஆவது இடம் பிடித்துள்ளது. இலங்கை ஹாட்ரிக் தோல்வி அடைந்து 9ஆவது இடத்தில் உள்ளது.

Australia vs Sri Lanka: விழுந்து விழுந்து கேட்ச் பிடித்த டேவிட் வார்னருக்கு காலில் காயம்!

மேலும், 2023 உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இலங்கை முதல் அணியாக ஹாட்ரிக் தோல்வி அடைந்துள்ளது. மேலும், ஆஸ்திரேலியாவிற்கு எதிராக உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இலங்கை 9ஆவது முறையாக தோல்வி அடைந்துள்ளது. 2 முறை மட்டுமே ஆஸ்திரேலியாவிற்கு எதிராக உலகக் கோப்பையில் இலங்கை வெற்றி பெற்றிருக்கிறது.

LA 2028 ஒலிம்பிக்கில் கிரிக்கெட் சேர்க்கப்பட விராட் கோலி முக்கிய காரணம் - நிக்கோலோ காம்ப்ரியானி!

click me!