ENG vs SA: நீயா நானா போட்டியில் இங்கிலாந்து - தென்னாப்பிரிக்கா பலப்பரீட்சை..! 3வது ODI டாஸ் ரிப்போர்ட்

Published : Jul 24, 2022, 03:30 PM IST
ENG vs SA: நீயா நானா போட்டியில் இங்கிலாந்து - தென்னாப்பிரிக்கா பலப்பரீட்சை..! 3வது ODI டாஸ் ரிப்போர்ட்

சுருக்கம்

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.  

தென்னாப்பிரிக்க அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகிறது. 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதலிரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றிருப்பதால் தொடர் 1-1 என சமனில் உள்ளது.

தொடரின் முடிவை தீர்மானிக்கும் கடைசி ஒருநாள் போட்டி இன்று லீட்ஸில் நடக்கிறது. இரு அணிகளுமே இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை வெல்லும் முனைப்பில் களமிறங்கியுள்ளன. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க கேப்டன் கேஷவ் மஹராஜ் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இதையும் படிங்க - WI vs IND: தம்பி நீங்க கிளம்புங்க.. 2வது ODI-க்கான இந்திய அணியில் ஒரு அதிரடி மாற்றம்..! இளம் வீரர் அறிமுகம்

தென்னாப்பிரிக்க அணி:

ஜே மலான், குயிண்டன் டி காக் (விக்கெட் கீப்பர்), ராசி வாண்டர் டசன், எய்டன் மார்க்ரம், ஹென்ரிச் கிளாசன், டேவிட் மில்லர், ட்வைன் பிரிட்டோரியஸ், கேஷவ் மஹராஜ் (கேப்டன்), அன்ரிக் நோர்க்யா, லுங்கி இங்கிடி, டப்ரைஸ் ஷாம்ஸி.

இதையும் படிங்க - என்னை பொறுத்தமட்டில் அவன் ஆல்ரவுண்டரே கிடையாது..! இந்திய வீரரை துச்சமாக மதிப்பிட்ட ஸ்காட் ஸ்டைரிஸ்

இங்கிலாந்து அணி:

ஜேசன் ராய், ஜானி பேர்ஸ்டோ, ஃபிலிப் சால்ட், ஜோ ரூட், ஜோஸ் பட்லர் (கேப்டன், விக்கெட் கீப்பர்), லியாம் லிவிங்ஸ்டோன், மொயின் அலி, சாம் கரன், டேவிட் வில்லி, அடில் ரஷீத், ரீஸ் டாப்ளி.
 

PREV
click me!

Recommended Stories

யார்க்கர் மன்னன் ஜஸ்பிரித் பும்ரா வரலாற்று சாதனை..! மற்ற பவுலர்கள் நினைச்சு கூட பார்க்க முடியாது!
IND VS SA 1st T20: தென்னாப்பிரிக்காவை வெறும் 74 ரன்னில் சுருட்டி வீசிய இந்தியா.. மெகா வெற்றி!