இந்திய அணி செய்திருக்கும் இந்த சாதனைக்கு பெருமைப்படுறதா? இல்ல அசிங்கப்படுறதா?

By karthikeyan VFirst Published Jul 23, 2022, 3:21 PM IST
Highlights

ஒரு ஆண்டில் அதிகமான கேப்டன்களை பயன்படுத்திய அணி என்ற சாதனையை இலங்கையுடன் பகிர்ந்துள்ளது இந்தியா.
 

கடந்த ஆண்டு நடந்த டி20 உலக கோப்பையுடன் விராட் கோலி இந்திய அணியின் கேப்டன்சியிலிருந்து விலகினார். அதன்பின்னர் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 ஆகிய 3 ஃபார்மட்டுக்குமான இந்திய அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டார்.

ஆனால் காயம் மற்றும் பல்வேறு காரணங்களால் கடந்த 7 மாதங்களில் 7 கேப்டன்கள் இந்திய அணியை வழிநடத்தியிருக்கின்றனர். அதாவது 2022ம் ஆண்டில், 3 விதமான ஃபார்மட்டிலும் இந்திய அணியை மொத்தமாக  7 கேப்டன்கள் வழிநடத்தியிருக்கின்றனர்.

இதையும் படிங்க - இந்தியாவிற்கு மேட்ச்சை ஜெயித்து கொடுத்த சஞ்சு சாம்சனின் விக்கெட் கீப்பிங்! ஒரே டைவில் ஹீரோவான சாம்சன்.. வீடியோ

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஒருநாள் தொடரில் கேப்டனாக செயல்படும் ஷிகர் தவான் 7வது கேப்டன் ஆவார். இதன்மூலம் ஒரு ஆண்டில் அதிகமான கேப்டன்களை பயன்படுத்திய அணி என்ற சாதனையை இலங்கையுடன் பகிர்ந்துள்ளது இந்தியா. இலங்கை அணி 2017ல் 7 கேப்டன்களை பயன்படுத்தியது.

இதையும் படிங்க - விராட் கோலியின் ஒரு இன்ஸ்டாகிராம் போஸ்ட்டுக்கு இத்தனை கோடியா? அடேங்கப்பா.. பிசிசிஐ ஒப்பந்த ஊதியத்தை விட அதிகம்

இந்த ஆண்டில் இந்திய அணியின் கேப்டன்கள் பட்டியல்:

1.விராட் கோலி - தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்

2. கேஎல் ராகுல் - தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடர்

3. ரோஹித் சர்மா (இப்போதைய இந்திய அணியின் நிரந்தர கேப்டன்)

4. ரிஷப் பண்ட் - தென்னாப்பிரிக்க டி20 தொடர்

5. ஹர்திக் பாண்டியா - அயர்லாந்து டி20 தொடர்

6. ஜஸ்ப்ரித் பும்ரா - இங்கிலாந்துக்கு எதிரான எட்ஜ்பாஸ்டன் டெஸ்ட்

7. ஷிகர் தவான் - வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஒருநாள் தொடர்
 

click me!