IRE vs NZ: 3வது டி20 போட்டியிலும் அபார வெற்றி..! அயர்லாந்தை ஒயிட்வாஷ் செய்து தொடரை வென்றது நியூசிலாந்து

By karthikeyan VFirst Published Jul 23, 2022, 2:28 PM IST
Highlights

அயர்லாந்துக்கு எதிரான 3வது டி20 போட்டியிலும் 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி, 3-0 என அயர்லாந்தை ஒயிட்வாஷ் செய்து தொடரை வென்றது.
 

நியூசிலாந்து அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடிய நியூசிலாந்து அணி, ஒருநாள் மற்றும் டி20 ஆகிய 2 தொடர்களையும் வென்றது.

3 டி20 போட்டிகள் போட்டிகள் கொண்ட தொடரின் முதலிரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று ஏற்கனவே நியூசிலாந்து அணி தொடரை வென்றுவிட்ட நிலையில் 3வது டி20 போட்டி நடந்தது. 

இதையும் படிங்க - 2வது ODIயில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இங்கிலாந்து மிகப்பெரிய வெற்றி..! ஆட்டநாயகன் ஆல்ரவுண்டர் சாம் கரன்

இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய அயர்லாந்து அணி 20 ஓவரில் 174 ரன்களை குவித்தது. தொடக்க வீரர் பால் ஸ்டர்லிங் 29 பந்தில் 40 ரன்கள் அடித்தார். டக்கர் (23), டெக்டார்(28) ஆகியோரும் பங்களிப்பு செய்தனர். எனினும் பின்வரிசையில் இறங்கிய மார்க் அடைரின் அதிரடியான பேட்டிங் தான் அயர்லாந்து 174 ரன்களை எட்ட காரணம். அதிரடியாக ஆடிய அடைர் 15 பந்தில் 2 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 37 ரன்களை விளாசினார்.

இதையடுத்து 175 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் கப்டில்(25), ஃபின் ஆலன் (14) ஏமாற்றினாலும், க்ளென் ஃபிலிப்ஸ் இந்த தொடரின் மற்ற போட்டிகளில் ஆடியதை போலவே அபாரமாக பேட்டிங் ஆடி அரைசதம் அடித்து 56 ரன்களுடன் கடைசிவரை களத்தில் நின்று போட்டியை முடித்து கொடுத்தார். அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்து ஆடிய டேரைல் மிட்செல் 48 ரன்கள் அடித்தார்.

இதையும் படிங்க - விராட் கோலியின் ஒரு இன்ஸ்டாகிராம் போஸ்ட்டுக்கு இத்தனை கோடியா? அடேங்கப்பா.. பிசிசிஐ ஒப்பந்த ஊதியத்தை விட அதிகம்

ஜிம்மி நீஷம் 6 பந்தில் 2 பவுண்டரிகள் மற்றும் 2சிக்ஸர்களுடன் 23 ரன்களை விளாச, 19வது ஓவரிலேயே இலக்கை அடித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி, அயர்லாந்தை ஒயிட்வாஷ் செய்து 3-0 என டி20 தொடரை வென்றது.

3வது டி20 போட்டியின் ஆட்டநாயகன் மற்றும் டி20 தொடரின் தொடர் நாயகன் ஆகிய 2 விருதுகளையும் க்ளென் ஃபிலிப்ஸ் வென்றார்.
 

click me!