2வது ODIயில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இங்கிலாந்து மிகப்பெரிய வெற்றி..! ஆட்டநாயகன் ஆல்ரவுண்டர் சாம் கரன்

By karthikeyan VFirst Published Jul 23, 2022, 2:13 PM IST
Highlights

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 118 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
 

தென்னாப்பிரிக்க அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகிறது. 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி தோல்வியடைந்தது. இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை இழந்த இங்கிலாந்து அணி, தொடர்ச்சியாக தென்னாப்பிரிக்காவிடமும் முதல் ஒருநாள் போட்டியில் தோற்றது அந்த அணிக்கு பெரும் வருத்தமாக இருந்தது.

வெற்றியுடன் கம்பேக் கொடுக்கும் முனைப்பிலும், தொடரை வெல்லும் வாய்ப்பை தக்கவைக்க வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்திலும் 2வது ஒருநாள் போட்டியில் ஆடியது இங்கிலாந்து அணி.

மான்செஸ்டரில் நடந்த போட்டி மழையால் தாமதமாக தொடங்கப்பட்டதால் 29 ஓவர் ஆட்டமாக நடத்தப்பட்டது. டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.

இதையும் படிங்க - விராட் கோலியின் ஒரு இன்ஸ்டாகிராம் போஸ்ட்டுக்கு இத்தனை கோடியா? அடேங்கப்பா.. பிசிசிஐ ஒப்பந்த ஊதியத்தை விட அதிகம்

முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் ஜேசன் ராய் 14 ரன்களும், பேர்ஸ்டோ 28 ரன்களும் மட்டுமே அடித்தனர். சால்ட்(17), ரூட் (1), மொயின் அலி (6), ஜோஸ் பட்லர் (19) ஆகியோரும் சோபிக்கவில்லை.

ஆனால் லிவிங்ஸ்டோனும், சாம் கரனும் இணைந்து அடித்து ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். லிவிங்ஸ்டோ 26  பந்தில் 38 ரன்கள் அடிக்க, சாம் கரன் 18 பந்தில் 2 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 35 ரன்களை விளாசினார். இங்கிலாந்து அணி. 28.1 ஓவரில் 201 ரன்கள் அடித்து ஆல் அவுட்டானது.

29 ஓவரில் 202 ரன்கள் என்ற கடின இலக்கை விரட்டிய தென்னாப்பிரிக்க  அணி வீரர்கள் தொடக்கம் முதலே அடுத்தடுத்து சீரான இடைவெளியில் ஆட்டமிழந்து வெளியேறினர். அந்த அணியில் அதிகபட்சமாகவே ஹென்ரிச் கிளாசன் தான் 33 ரன்கள் அடித்தார். அவரைத்தவிர மற்ற அனைத்து வீரர்களுமே மிகச்சொற்ப ரன்களுக்கும் ரன்னே அடிக்காமல் சிலரும் வெளியேற, வெறும் 83 ரன்களுக்கு ஆல் அவுட்டானது தென்னாப்பிரிக்க அணி. 

இதையும் படிங்க - ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் 3ம் இடத்தை வலுவாக பிடித்த பாகிஸ்தான்..! சிக்கலில் இந்தியா

இதையடுத்து 118 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி, 1-1 என ஒருநாள் தொடரை சமன் செய்துள்ளது. பேட்டிங்கில் 18 பந்தில் 35 ரன்கள் அடித்த சாம் கரன், பவுலிங்கில் 2 ஓவர்கள் பந்துவீசி 5 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்டையும் வீழ்த்திய நிலையில், அவர் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
 

click me!