இந்தியாவிற்கு மேட்ச்சை ஜெயித்து கொடுத்த சஞ்சு சாம்சனின் விக்கெட் கீப்பிங்! ஒரே டைவில் ஹீரோவான சாம்சன்.. வீடியோ

By karthikeyan VFirst Published Jul 23, 2022, 2:53 PM IST
Highlights

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு சஞ்சு சாம்சனின் அபாரமான விக்கெட் கீப்பிங் தான் காரணம். கடைசி ஓவரில் சாம்சன் அடித்த டைவ் தான் இந்தியாவிற்கு போட்டியை ஜெயித்து கொடுத்தது. அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.
 

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி டிரினிடாட்டில் நேற்று நடந்தது. இந்த ஒருநாள் தொடரில் ரோஹித், கோலி, ரிஷப் பண்ட், பும்ரா, ஹர்திக் பாண்டியா ஆகிய முன்னணி வீரர்கள் ஓய்வில் இருக்கின்றனர்.

எனவே ஷிகர் தவான் தலைமையில் வெஸ்ட் இண்டீஸை எதிர்கொண்ட இந்திய அணி முதல் ஒருநாள் போட்டியில் 3 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

இந்த தொடரில் ரிஷப் பண்ட் ஆடாத நிலையில், விக்கெட் கீப்பராக ஆட சஞ்சு சாம்சன் மற்றும் இஷான் கிஷன் இடையே போட்டி நிலவியது. இஷான் கிஷனை உட்காரவைத்துவிட்டு, சஞ்சு சாம்சனுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டு ஆடவைக்கப்பட்டார்.

இதையும் படிங்க - விராட் கோலியின் ஒரு இன்ஸ்டாகிராம் போஸ்ட்டுக்கு இத்தனை கோடியா? அடேங்கப்பா.. பிசிசிஐ ஒப்பந்த ஊதியத்தை விட அதிகம்

சஞ்சு சாம்சன் திறமையின் மீது அனைவருக்கும் அதீத நம்பிக்கை உள்ளது. ஆனால் அவர் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்துவதில்லை. அதுதான் அவரது பிரச்னையாக இருந்துவருகிறது. வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியிலும் 12 ரன்கள் மட்டுமே அடித்து ஏமாற்றமளித்தார்.

ஆனால் விக்கெட் கீப்பிங்கில் கடைசி நேரத்தில் அருமையான டைவ் அடித்து பந்தை பிடித்து, இந்தியாவிற்கு போட்டியையே ஜெயித்து கொடுத்துவிட்டார் சஞ்சு சாம்சன். இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி, தவான்(97), ஷுப்மன் கில்(64), ஷ்ரேயாஸ் ஐயர்(54) ஆகியோரின் சிறப்பான பேட்டிங்கால் 50 ஓவரில் 308 ரன்களை குவித்தது.

309 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு கடைசி 2 ஓவரில் 27 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், 49வது ஓவரில் 12 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார் பிரசித் கிருஷ்ணா. கடைசி ஓவரில் 15 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், அந்த ஓவரை இந்தியா சார்பில் முகமது சிராஜ் வீழ்த்தினார். முதல் 4 பந்தில் 7 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார் சிராஜ்.

இதையும் படிங்க - நான் மட்டும் கோலி கேப்டன்சியில் ஆடியிருந்தால் இந்தியா 3 உலக கோப்பைகளை ஜெயிச்சுருக்கும் - ஸ்ரீசாந்த்

கடைசி 2 பந்தில் வெஸ்ட் இண்டீஸின் வெற்றிக்கு 8 ரன்கள் தேவைப்பட, 5வது பந்தை செம வைடாக வீசினார். விக்கெட் கீப்பர் விட்டால் அது பவுண்டரிதான். அது பவுண்டரி சென்றால், வைடுக்கு ஒரு ரன்னுடன் சேர்த்து மொத்தமாக வெஸ்ட் இண்டீஸுக்கு 5 ரன்கள் கிடைக்கும். அப்படி கிடைத்துவிட்டால், கடைசி 2 பந்தில் 3 ரன்களை அந்த அணி எளிதாக அடித்திருக்கக்கூடும். அப்படியான நெருக்கடியான நிலையில், சிராஜ் வீசிய வைடை செமயாக டைவ் அடித்து பந்தை மறைத்தார் சஞ்சு சாம்சன். சஞ்சு சாம்சனின் அபாரமான விக்கெட் கீப்பிங்கால் 4 ரன்கள் தடுக்கப்பட்டது. இதையடுத்து கடைசி 2 பந்தில் 3 ரன்கள் மட்டுமே அடித்தது வெஸ்ட் இண்டீஸ். 

இதையடுத்து 3 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது இந்தியா. இந்திய அணியின் வெற்றிக்கு சாம்சனின் அந்த அபாரமான விக்கெட் கீப்பிங் தான் காரணம். அந்த பவுண்டரியை விட்டிருந்தால் இந்தியா தோற்றிருக்கும். சஞ்சு சாம்சனின் விக்கெட் கீப்பிங்கை சமூக வலைதளங்களில் ரசிகர்கள் வெகுவாக பாராட்டி, அவரை ஹீரோவாக கொண்டாடிவருகின்றனர். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.
 

मेन ऑफ दा मैच....💞
सालो बाद दूरदर्शन पर भारत के दर्शन हुए... LOVE YOU...🇮🇳💕 pic.twitter.com/dMdj76hw9L

— मोहित शुक्ला گاندھیائی (@shuklaa1986)
click me!