England vs South Africa: இங்கிலாந்தை துவம்சம் செய்த கிளாசென், ஜான்சென் – தென் ஆப்பிரிக்கா 399 ரன்கள் குவிப்பு!

By Rsiva kumar  |  First Published Oct 21, 2023, 7:13 PM IST

இங்கிலாந்துக்கு எதிரான 20ஆவது லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா ஹென்ரிச் கிளாசென் மற்றும் மார்கோ ஜான்செனின் அதிரடியால் 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 399 ரன்கள் குவித்துள்ளது.


தென் ஆப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 20ஆவது லீக் மும்பையில் நடந்து வருகிறது. இதில், டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் முதலில் பவுலிங் தேர்வு செய்தார். 3 போட்டிகளுக்குப் பிறகு பென் ஸ்டோக்ஸ் அணிக்கு திரும்பியுள்ளார். மேலும், சாம் கரண் மற்றும் கிறிஸ் வோக்ஸ் ஆகியோர் நீக்கப்பட்டு அவர்களுக்குப் பதிலாக டேவிட் வில்லி மற்றும் கஸ் அட்கின்சன் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

NED vs SL:உலகக் கோப்பையில் தோனி – ஜடேஜா சாதனையை முறியடித்து புதிய வரலாற்று சாதனை படைத்த நெதர்லாந்து பிளேயர்ஸ்!

Tap to resize

Latest Videos

குயிண்டன் டி காக் மற்றும் ரீசா ஹெண்ட்ரிக்ஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில், டி காக் முதல் ஓவரிலே ரீஸ் டாப்லே பந்தில் ஆட்டமிழந்தார். அதன் பிறகு ரஸ்ஸி வான் டெர் டுசென் களமிறங்கினார். இருவரும் நிதானமாக விளையாடி அடுத்தடுத்து அரைசதம் அடித்தனர். ஒரு கட்டத்தில் டுசென் 61 பந்துகளில் 8 பவுண்டரியுடன் 60 ரன்கள் சேர்த்து அடில் ரஷித் பந்து வீச்சில் பேர்ஸ்டோவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

இலங்கைக்கு தண்ணி காட்டிய ஏங்கல்பிரெக்ட் – லோகன் வான் பீக் – எக்ஸ்டிரா 33, நெதர்லாந்து 262 ரன்கள் குவிப்பு!

இந்த ஜோடி 2ஆவது விக்கெட்டிற்கு 121 ரன்கள் குவித்தது. அதன் பிறகு சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஹெண்ட்ரிக்ஸ் 75 பந்துகளில் 9 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் உள்பட 85 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து வந்த கேப்டன் எய்டன் மார்க்ரம் 42 ரன்களில் நடையை கட்ட, டேவிட் மில்லர் 5 ரன்களில் ஆட்டமிழந்தார்ன். அதன் பிறகு கிளாசென் மற்றும் ஜான்சென் இருவரும் ஜோடி சேர்ந்து பவுண்டரியும், சிக்ஸருமாக விளாச தென் ஆப்பிரிக்காவின் ஸ்கோர் ஜெட் வேகத்தில் உயர்ந்தது.

ஒரு கட்டத்தில் தென் ஆப்பிரிக்கா 40 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 256 ரன்கள் குவித்தது. அதன் பிறகு கடைசி 10 ஓவர்களில் தென் ஆப்பிரிக்கா 143 ரன்கள் குவித்துள்ளது. இந்த போட்டியில் 300 ரன்களுக்கு மேல் குவித்ததன் மூலமாக தென் ஆப்பிரிக்கா தொடர்ந்து 6ஆவது முறையாக முதலில் பேட்டிங் செய்து 300 ரன்களுக்கு மேல் குவித்துள்ளது.

2024 ஐபிஎல் வெளிநாடுகளில் நடக்க வாய்ப்பில்லை – இந்தியாவில் தான் நடத்தப்படும் – அருண் சிங் துமல்!

ஒரு புறம் அதிரடியாக விளையாடிய கிளாசென் 61 பந்துகளில் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் தனது முதல் சதம் விளாசினார். இதன் மூலமாக உலகக் கோப்பை கிரிக்கெட்டில் அதிவேகமாக சதம் அடித்தவர்களின் பட்டியலில் ஹெண்ட்ரிச் கிளாசென் இணைந்துள்ளார்.

49 எய்டன் மார்க்ரம் v இலங்கை டெல்லி 2023

50 ஓ பிரையன் v இங்கிலாந்து பெங்களூரு 2011

51 கிளென் மேக்ஸ்வெல் v இலங்கை சிட்னி 2015

52 எபிடிவிலியர்ஸ் v வெஸ்ட் இண்டீஸ் சிட்னி 2015

57 இயான் மோர்கன் v ஆப்கானிஸ்தான், மான்செஸ்டர் 2019

61 ஹெண்ட்ரிச் கிளாசென் v இங்கிலாந்து, மும்பை 2023

மீண்டும் மீண்டும் பாகிஸ்தான் வீரர்கள் செய்த தவறு: டேவிட் வார்னர் சதம் அடிக்க காரணமாக உசாமா மிர்!

மற்றொரு புறம் அதிரடியாக விளையாடிய ஜான்சென் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் அரைசதம் கடந்தார். அவர் 35 பந்துகளில் 51 ரன்கள் எடுத்தார். 48 ஓவர்களில் தென் ஆப்பிரிக்கா 5 விக்கெட் இழப்பிற்கு 368 ரன்கள் எடுத்திருந்தது. ஆனால் கடந்த 2009 ஆம் ஆண்டு கேப் டவுனில் நடந்த ஒரு நாள் போட்டியில் இங்கிலாந்திற்கு எதிராக 354 ரன்கள் எடுத்ததே அதிகபட்ச ஸ்கோராக இருந்தது. இதே போன்று இங்கிலாந்திற்கு எதிராக 2019 ஆம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அதிகபட்சமாக 8 விக்கெட் இழப்பிற்கு 348 ரன்கள் எடுத்திருந்தது.

AUS vs PAK: மாமனார் சாதனையை சமன் செய்த மருமகன் – ஆஸி.க்கு எதிராக 5 விக்கெட் எடுத்த ஷாகிடி அஃப்ரிடி

ஆனால், இன்றைய போட்டியில் தென் ஆப்பிரிக்கா 355 ரன்கள் எடுத்து அந்த அதிகபட்ச ரன்கள் சாதனையை முறியடித்துள்ளது. ஒரு கட்டத்தில் கிளாசென் 67 பந்துகளில் 12 பவுண்டரி 4 சிக்ஸர்கள் உள்பட 109 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இந்த ஜோடி 6ஆவது விக்கெட்டிற்கு 143 ரன்கள் குவித்துள்ளது. கடைசியாக ஜான்சென் அதிரடி காட்டவே தென் ஆப்பிரிக்கா 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 399 ரன்கள் குவித்தது. இதில் ஜான்சென் 42 பந்துகளில் 3 பவுண்டரி 6 சிக்ஸர்கள் உள்பட 75 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இந்தப் போட்டியில் தென் ஆப்பிரிக்கா 399 ரன்கள் குவித்ததன் மூலமாக இங்கிலாந்திற்கு எதிராக ஒரு நாள் போட்டிகளில் அதிகபட்ச ரன்களை குவித்துள்ளது. இதற்கு முன்னதாக நியூசிலாந்து 5 விக்கெட் இழப்பிற்கு 398 ரன்கள் எடுத்திருந்தது.

click me!