ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 212 ரன்கள் மட்டுமே குவித்துள்ளது.
உலகக் கோப்பை கிரிக்கெட்டின் 2ஆவது அரையிறுதிப் போட்டி தற்போது கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்து வருகிறது. இதில், தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா கேப்டன் டெம்பா பவுமா முதலில் பேட்டிங் செய்தார். ஆனால், அவர் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். குயீண்டன் டி காக் 3 ரன்களில் வெளியேற, ரஸ்ஸி வான் டெர் டூசென் 6 ரன்கள் எடுத்தார். எய்டன் மார்க்ரம் 10 ரன்கள் சேர்த்தார்.
தென் ஆப்பிரிக்கா 11.5 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 24 ரன்கள் மட்டுமே எடுத்து தடுமாறியது. இதையடுத்து ஹென்ரிச் கிளாசென் மற்றும் டேவிட் மில்லர் இருவரும் ஜோடி சேர்ந்து ரன்கள் சேர்த்தனர். 5ஆவது விக்கெட்டிற்கு இந்த ஜோடி 95 ரன்கள் குவித்தது. கிளாசென் 47 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்க, அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். கடைசி வரை நின்று நிதானமாக விளையாடிய டேவிட் மில்லர் 116 பந்துகளில் 8 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் உள்பட 101 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
உலகக் கோப்பையில் இந்தியா வெற்றி பெற்றால் நிர்வாணமாக ஓடுவேன் – பரபரப்பை கிளப்பி ரேகா போஜ்!
இறுதியாக, ரபாடா 10 ரன்களில் ஆட்டமிழக்க தென் ஆப்பிரிக்கா 49.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 212 ரன்கள் மட்டுமே எடுத்தது. பவுலிங்கைப் பொறுத்த வரையில் மிட்செல் ஸ்டார்க் மற்றும் பேட் கம்மின்ஸ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் கைப்பற்றினர். ஜோஷ் ஹசல்வுட் மற்றும் டிராவிஸ் ஹெட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர். எளிய இலக்கை நோக்கி ஆஸ்திரேலியா பேட்டிங் செய்து வருகிறது.
மேக்ஸ்வெல், ஸ்டார்க்கை களமிறக்கிய ஆஸ்திரேலியா – இறுதிப் போட்டிக்கு முன்னேறுமா தென் ஆப்பிரிக்கா?
இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றால் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா 20 ஆண்டுகளுக்குப் பிறகு 2ஆவது முறையாக இறுதிப் போட்டியில் மோதும். தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றால் முதல் முறையாக இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை நடத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.