பிசிசிஐ தலைவர் பதவிக்காலம் நிறைவு.. மௌனம் கலைத்த கங்குலி

By karthikeyan VFirst Published Oct 13, 2022, 6:33 PM IST
Highlights

பிசிசிஐ தலைவர் பதவிக்காலம் முடிவுறும் நிலையில், அதுகுறித்து பேசியுள்ளார் சௌரவ் கங்குலி.
 

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி, கடந்த 2018ம் ஆண்டிலிருந்து பிசிசிஐ தலைவராக இருந்துவந்தார். சௌரவ் கங்குலியின் பதவிக்காலம் நிறைவடையும் நிலையில், அவருக்கு பதவி நீட்டிப்பு வழங்கப்படவில்லை.

பிசிசிஐ தலைவர், செயலாளர் ஆகிய பதவிக்காலம் முடிவடையும் நிலையில், வரும் 18ம் தேதி மும்பையில் நடக்கும் பிசிசிஐ பொதுக்குழு கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்படவுள்ளனர்.

இதையும் படிங்க - டி20 உலக கோப்பை அரையிறுதியில் இந்த 4 அணிகள் தான் மோதும்..! ரவி சாஸ்திரி அதிரடி

பிசிசிஐ செயலாளராக இருக்கும், மத்திய அமைச்சர் அமித் ஷாவின் மகன் ஜெய் ஷா அந்த பதவியில் மீண்டும் தேர்வு செய்யப்படவுள்ளார். ஆனால் தலைவராக இருக்கும் சௌரவ் கங்குலிக்கு மீண்டும் வாய்ப்பளிக்கப்படவில்லை.

இந்திய அணியின் முன்னாள் வீரர் ரோஜர் பின்னி பிசிசிஐ தலைவர் பதவிக்கு விண்ணப்பித்துள்ளார். எனவே அவர் பிசிசிஐ தலைவராக தேர்வு செய்யப்படவுள்ளதாக தெரிகிறது. 

பாஜகவில் கங்குலி சேர மறுத்ததால் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக, அவருக்கு பிசிசிஐ தலைவர் பதவிக்கால நீட்டிப்பு வழங்கப்படவில்லை என்று திரிணாமூல் காங்கிரஸ் குற்றம்சாட்டியது. பிசிசிஐ செயலாளராக இருக்கும் அமித் ஷாவின் மகன் ஜெய் ஷாவிற்கு மீண்டும் வாய்ப்பளிக்கப்படும் நிலையில், கங்குலிக்கு மட்டும் வழங்கப்படாதது பாஜகவின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று திரிணாமூல் காங்கிரஸ் குற்றம்சாட்டியது. அதற்கு பாஜக சார்பில் பதிலளிக்கப்பட்டது. இப்படியாக, கங்குலி விவகாரம் திரிணாமூல் காங்கிரஸ் - பாஜக இடையே கடும் விவாதமாக உருவெடுத்தது.

இந்நிலையில், பிசிசிஐ தலைவர் பதவிக்கால நிறைவு குறித்து பேசியுள்ள சௌரவ் கங்குலி, பெங்கால் கிரிக்கெட் வாரிய தலைவராக 5 ஆண்டுகளாக இருந்திருக்கிறேன். பிசிசிஐ தலைவராகவும் இருந்திருக்கிறேன். இந்த பதவிகளிலிருந்தெல்லாம் விலகித்தான் ஆகவேண்டும். நிர்வாக பொறுப்பில் இருந்து, அணியின் நலனுக்காக சிறப்பான பங்களிப்பை மட்டுமே நாம் அளிக்க வேண்டும். ஒரு வீரராக இந்திய அணியில் நீண்டகாலம் ஆடியிருக்கிறேன். ஒரு நிர்வாகியாகவும் எனது பணியை சரியாக செய்தேன். எல்லா காலத்துக்கும் ஆடிக்கொண்டே இருக்க முடியாது. அதுபோலத்தான், ஒரு நிர்வாகியாகவும்.. ஒரு கட்டத்தில் ஒதுங்கித்தான் ஆகவேண்டும். ம்

இதையும் படிங்க - டி20 உலக கோப்பை: பும்ராவுக்கு மாற்றாக சர்ப்ரைஸ் சாய்ஸ்..! ஆஸ்திரேலியாவிற்கு பறந்த 3 வீரர்கள்

நான் இந்தியாவிற்காக ஆடிய காலம் தான் இனிமையான காலம். இதை நான் பலமுறை கூறியிருக்கிறேன். அதற்கு பின் எவ்வளவோ பார்த்துவிட்டேன். பெங்கால் கிரிக்கெட் சங்க தலைவர், பிசிசிஐ தலைவர் ஆகிய பதவிகளை வகித்துவிட்டேன். எதிர்காலத்தில் இன்னும் சிறந்த பொறுப்புகளை வகிக்கவுள்ளேன். ஆனால் நான் இந்தியாவிற்காக ஆடிய அந்த 15 ஆண்டுகள் தான் பொற்காலம் என்றார் கங்குலி.
 

click me!