டி20 உலக கோப்பை: பும்ராவுக்கு மாற்றாக சர்ப்ரைஸ் சாய்ஸ்..! ஆஸ்திரேலியாவிற்கு பறந்த 3 வீரர்கள்

ஆஸ்திரேலியாவிற்கு சென்று டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியுடன் இணைகின்றனர் 3 ஃபாஸ்ட் பவுலர்கள்.
 

shami siraj and shardul thakur go to australia to join with india squad for t20 world cup

டி20 உலக கோப்பை வரும் 16ம் தேதி தொடங்கவுள்ள நிலையில், அதற்காக ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி ஆஸ்திரேலியாவில் பயிற்சி போட்டிகளில் ஆடிவருவதுடன், தீவிர பயிற்சியிலும் ஈடுபட்டுவருகிறது.

டி20 உலக கோப்பைக்கான இந்திய அணி:

Latest Videos

ரோஹித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல் (துணை கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ரவிச்சந்திரன் அஷ்வின், யுஸ்வேந்திர சாஹல், அக்ஸர் படேல், புவனேஷ்வர் குமார், ஹர்ஷல் படேல், அர்ஷ்தீப் சிங்.

இதையும் படிங்க - டி20 உலக கோப்பை அரையிறுதியில் இந்த 4 அணிகள் தான் மோதும்..! ரவி சாஸ்திரி அதிரடி

டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெற்றிருந்த பும்ரா காயம் காரணமாக விலகிவிட்டார். அவருக்கு மாற்று வீரர் இன்னும் அறிவிக்கப்படவில்லை. ரிசர்வ் வீரர்களில் ஒருவராக இருந்த தீபக் சாஹரும், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரின்போது காயமடைந்ததால் அவரும் டி20 உலக கோப்பையிலிருந்து விலகிவிட்டார்.

பும்ராவுக்கு மாற்று வீரராக ஷமி அறிவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஷமியும் ரிசர்வ் வீரராக ஏற்கனவே எடுக்கப்பட்டிருந்தார். ஷமி - சிராஜ் ஆகிய இருவரில் ஒருவர் பும்ராவுக்கு மாற்று வீரராக அறிவிக்கப்படலாம். இதற்கிடையே தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக ஷர்துல் தாகூர் பவுலிங்கில் அசத்தியதுடன், பேட்டிங்கிலும் அபாரமாக ஆடினார். 

பும்ரா, தீபக் சாஹர் ஆகிய 2 ஃபாஸ்ட்பவுலர்களும் காயம் காரணமாக விலகிய நிலையில், பும்ராவுக்கு மாற்று வீரர் இன்னும் அறிவிக்கப்படவில்லை என்றாலும், ஷமி, சிராஜ் மற்றும் ஷர்துல் தாகூர் ஆகிய மூவரும் ஆஸ்திரேலியாவிற்கு சென்றுள்ளனர்.

இதையும் படிங்க - டி20 உலக கோப்பை போட்டிகள் தியேட்டரில் நேரலையாக ஒளிபரப்பு..!

இவர்கள் மூவரில் ஒருவர் பும்ராவிற்கு மாற்று வீரராக அறிவிக்கப்படுவார். மற்ற இருவர் ரிசர்வ் பட்டியலில் இருப்பார்கள். 
 

vuukle one pixel image
click me!
vuukle one pixel image