இந்திய அணியின் இளவரசர் என்று அழைக்கப்படும் சுப்மன் கில் தசைப்பிடிப்பு காரணமாக ரிட்டயர்டு கர்ட் முறையில் வெளியேறியுள்ளார்.
இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையிலான மிக முக்கியமான முதல் அரையிறுதிப் போட்டி தற்போது மும்பை வான்கடே மைதானத்தில் நடந்து வருகிறது. இதில், டாஸ் வென்று இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. அதன்படி ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில், ரோகித் சர்மா அதிரடியாக விளையாடி 4 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் உள்பட 47 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். எனினும், உலகக் கோப்பை கிரிக்கெட்டில் 51 சிக்ஸர்கள் அடித்து அதிக சிக்ஸர்கள் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். மேலும், 49 சிக்ஸர்கள் அடித்திருந்த கிறிஸ் கெயில் சாதனையையும் முறியடித்துள்ளார்.
இவரைத் தொடர்ந்து சுப்மன் கில் உடன் விராட் கோலி இணைந்து விளையாடி வருகிறார். இந்த நிலையில் தான் சுப்மன் கில் 41 பந்துகளில் 50 ரன்கள் அடித்து தனது 13 ஆவது அரைசதத்தை நிறைவு செய்தார். தொடர்ந்து விளையாடிய கில் 79 ரன்களில் ரிட்டயர்டு கர்ட் முறையில் வெளியேறினார். ஆனால், அதற்கு முன்னதாக தசைப்பிடிப்பு காரணமாக அவதிப்பட்டு வந்த அவரை உடனடியாக வெளியேறும்படி பிரசித் கிருஷ்ணா மூலமாக சொல்லி அனுப்பியுள்ளார். இதையடுத்து சுப்மன் கில் உடனடியாக வெளியேறியுள்ளார்.
சம்பவம் இருக்கு – பழி தீர்க்க தயாரான டீம் இந்தியா – டாஸ் வென்று பேட்டிங்!
எனினும், அணிக்கு தேவைப்படும் போது அவர் வந்து விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கில் 65 பந்துகளில் 8 பவுண்டரி 3 சிக்ஸர்கள் உள்பட 79 ரன்கள் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Allah Jldii thik karde aaaameeen 😐😐 pic.twitter.com/QYq1PqKoNT
— 𓀠Srkian_امرین (@Amreen_Srkian)