சம்பவம் இருக்கு – பழி தீர்க்க தயாரான டீம் இந்தியா – டாஸ் வென்று பேட்டிங்!

By Rsiva kumar  |  First Published Nov 15, 2023, 1:47 PM IST

நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் அரையிறுதிப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளார்.


இந்தியாவில் நடந்து வரும் 13 ஆவது கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் வரும் 19 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இந்த தொடரில் இடம் பெற்ற 10 அணிகளில் தற்போது இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து என்று 4 அணிகள் மட்டுமே அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளன. இதில், இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் அரையிறுதிப் போட்டி இன்னும் சற்று நேரத்தில் மும்பை வான்கடே மைதானத்தில் நடக்க இருக்கிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளார்.

IND vs NZ: மும்பை போலீசுக்கு மிரட்டல் – இந்தியா – நியூசிலாந்து போட்டிக்கு பாதுகாப்பை பலப்படுத்திய காவல்துறை!

Tap to resize

Latest Videos

இந்திய அணியை பொறுத்த வரையில் எந்த மாற்றமும் இல்லை. ரோகித் சர்மா இன்று தனது ஹோம் மைதானத்தில் விளையாடுகிறார். நியூசிலாந்து அணியிலும் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. கடந்த 2019 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் நியூசிலாந்து அணி முதலில் விளையாடியது. இதில், நியூசிலாந்து 8 விக்கெட்டுகளை இழந்து 239 ரன்கள் குவித்தது. பின்னர் விளையாடிய இந்திய அணி 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 221 ரன்கள் மட்டுமே எடுத்து 18 ரன்களில் தோல்வி அடைந்து வெளியேறியது.

ஆனால், இன்று நடக்கும் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து நியூசிலாந்து அணிக்கு இலக்கு நிர்ணயிக்க உள்ளது.

தப்பி தவறி எனது வாயில் வந்துவிட்டது, எந்த உள்நோக்கமும் இல்லை; ஐஸ்வர்யா ராயிடம் மன்னிப்பு கேட்ட அப்துல் ரசாக்!

இந்தியா:

ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், முகமது ஷமி, ஜஸ்ப்ரித் பும்ரா, முகமது சிராஜ்.

நியூசிலாந்து:

டெவான் கான்வே, ரச்சின் ரவீந்திரா, கேன் வில்லியம்சன் (கேப்டன்), டேரில் மிட்செல், டாம் லாதம் (விக்கெட் கீப்பர்), கிளென் பில்ப்ஸ், மிட்செல் சாண்ட்னர், மார்க் சேப்மேன், டிம் சவுதி, லாக்கி ஃபெர்குசன், டிரெண்ட் போல்ட்

click me!