நியூசிலாந்திற்கு எதிரான உலகக் கோப்பையின் முதல் அரையிறுதிப் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா உலகக் கோப்பையில் அதிக சிக்ஸர்கள் அடித்த கிறிஸ் கெயில் சாதனையை முறியடித்துள்ளார்.
நியூசிலாந்து மற்றும் இந்தியா இடையிலான உலகக் கோப்பையின் முதல் அரையிறுதிப் போட்டி தற்போது மும்பையிலுள்ள வான்கடே மைதானத்தில் நடந்து வருகிறது. இதில், டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பேட்டிங் தேர்வு செய்தார். இதுவரையில் நடந்த 9 லீக் போட்டிகளிலும் வெற்றி பெற்ற அதே அணியோடு இன்றைய போட்டியிலும் இந்திய அணி களமிறங்கியது.
சம்பவம் இருக்கு – பழி தீர்க்க தயாரான டீம் இந்தியா – டாஸ் வென்று பேட்டிங்!
அதன்படி, ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் இருவரும் களமிறங்கினர். இதில் தொடக்கம் முதலே அதிரடி காட்டிய இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா இந்தப் போட்டியில் 4 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் உள்பட 47 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அரைசதம் அடிக்காவிட்டாலும் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் அடித்து வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
இந்தப் போட்டியில் தனது 3ஆவது சிக்ஸர் அடித்ததன் மூலமாக உலகக் கோப்பை கிரிக்கெட்டில் 50 சிக்ஸர்கள் அடித்த கிறிஸ் கெயில் சாதனையை முறியடித்து புதிய சாதனை படைத்துள்ளார். கிறிஸ் கெயில் 49 சிக்ஸர்கள் உடன் 2ஆவது இடத்திலும், கிளென் மேக்ஸ்வேல் 43 சிக்ஸர்கள் உடன் 3ஆவது இடத்திலும், டிவிலியர்ஸ் மற்றும் ராகுல் டிராவிட் 37 சிக்ஸர்கள் உடன் அடுத்த இடத்தில் உள்ளனர்.
இந்த உலகக் கோப்பை கிரிக்கெட்டில் மட்டும் 27 சிக்ஸர்கள் அடித்து முதலிடம் பிடித்துள்ளார். கிளென் மேக்ஸ்வெல் 22 சிக்ஸர்கள் அடித்துள்ளார். குயீண்டன் டி காக் (2023) 21 சிக்ஸர்கள் அடித்துள்ளார். கிறிஸ் கெயில் 26 சிக்ஸர்கள் (2015) அடித்துள்ளார். இயான் மோர்கன் (2019) 22 சிக்ஸர்கள் அடித்துள்ளார். ஏபி டிவிலியர்ஸ் (2015) 21 சிக்ஸர்கள் அடித்துள்ளார்.