நியூசிலாந்திற்கு எதிரான 21ஆவது லீக் போட்டியில் சிறப்பான கேட்ச் பிடித்த ஷ்ரேயாஸ் ஐயர் பீல்டிங் பயிற்சியாளர் திலீப்பிடம் பதக்கம் கேட்டுள்ளார்.
இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையிலான உலகக் கோப்பையின் 21ஆவது லீக் போட்டி தற்போது நடந்து வருகிறது. இதில், டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் பவுலிங் செய்வதாக அறிவித்தார். இந்திய அணியைப் பொற்த்தவரையில் காயம் காரணமாக ஹர்திக் பாண்டியா இடம் பெறாத நிலையில், அவருக்குப் பதிலாக சூர்யகுமார் யாதவ் இடம் பெற்றுள்ளார். மேலும், ஷர்துல் தாக்கூர் நீக்கப்பட்டு அவருக்குப் பதிலாக முகமது ஷமி அணியில் இடம் பெற்றுள்ளார்.
India vs New Zealand: டாஸ் வென்ற இந்தியா பவுலிங் – சூர்யகுமார் யாதவ், முகமது ஷமிக்கு வாய்ப்பு!
இந்தியா:
ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, குல்தீப் யாதவ், ஜஸ்ப்ரித் பும்ரா, முகமது சிராஜ்.
நியூசிலாந்து:
டெவான் கான்வே, வில் யங், ரச்சின் ரவீந்திரா, டேரில் மிட்செல், டாம் லாதம் (கேப்டன், விக்கெட் கீப்பர்), கிளென் பிலிப்ஸ், மார்க் சேப்மேன், மிட்செல் சாண்ட்னர், டிரெண்ட் போல்ட், மேட் ஹென்றி, லாக்கி ஃபெர்குசன்
நியூசிலாந்து அணியில் டெவான் கான்வே மற்றும் வில் யங் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில், முதல் ஓவரை ஜஸ்ப்ரித் பும்ரா வீசினார். 2ஆவது ஓவரை முகமது சிராஜ் வீசினார். பின்னர் 4ஆவது ஓவரை சிராஜ் வீசினார். அந்த ஓவரின் 3ஆவது பந்தில் டெவான் கான்வே அடித்த பந்தை ஷ்ரேயாஸ் ஐயர் டைவ் அடித்து கேட்ச் பிடித்தார். அதன் பிறகு பீல்டிங் பயிற்சியாளரிடம் தனக்கு பதக்கம் வேண்டும் என்று கேட்டுள்ளார்.
இந்திய அணியைப் பொறுத்த வரையில் சிறப்பாக பீல்டிங் செய்த வீரர்களுக்கு பீல்டிங் பயிற்சியாளர் திலீப் பதக்கம் கொடுத்து வருகிறார். அந்த வகையில் விராட் கோலி, ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் ஒவ்வொரு போட்டியிலும் பதக்கம் வென்றுள்ளனர். இந்த நிலையில் இன்றைய போட்டியில் ஷ்ரேயாஸ் ஐயர் கேட்ச் பிடித்து பதக்கம் கேட்டுள்ளார்.
அதன் பிறகு முகமது ஷமி ஓவரில் ரவீந்திர ஜடேஜா எளிதான கேட்ச் வாய்ப்பை கோட்டைவிட்டுள்ளார். முதல் பவர்பிளே என்று சொல்லப்படும் முதல் 10 ஓவர்களுக்குள் முகமது சிராஜ் விக்கெட் கைப்பற்றினால், அந்தப் போட்டியில் இந்திய அணி 90 சதவிகிதம் வெற்றி பெறும் என்று கூறப்படுகிறது.
இதுவரையில் இந்தியா விளையாடிய 4 போட்டிகளில் இடம் பெறாத முகமது ஷமி இந்தப் போட்டியில் இடம் பெற்றார். அவர் இந்தப் போட்டியில் 9ஆவது ஓவரை வீச வந்தார். அந்த ஓவரில் முதல் பந்திலேயே ஒரு விக்கெட் கைப்பற்றியதன் மூலமாக இந்திய அணிக்காக அதிக விக்கெட்டுகள் கைப்பற்றி அனில் கும்ப்ளே சாதனையை முறியடித்துள்ளார். ஷமி 18 இன்னிங்ஸ்களில் 32 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார். அனில் கும்ப்ளே 14 இன்னிங்ஸ் விளையாடி 28 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார்.
India vs New Zealand: கேன் வில்லியம்சன் இல்லை; இந்தியாவிற்கு எதிராக களமிறங்கும் டிம் சவுதி!