India vs New Zealand: முதல் முறையாக தரம்சாலாவில் உலகக் கோப்பையில் விளையாடும் டீம் இந்தியா – சாதிக்குமா?

Published : Oct 22, 2023, 01:26 PM IST
India vs New Zealand: முதல் முறையாக தரம்சாலாவில் உலகக் கோப்பையில் விளையாடும் டீம் இந்தியா – சாதிக்குமா?

சுருக்கம்

தரம்சாலாவில் இன்று நடக்கும் நியூசிலாந்துக்கு அணிக்கு எதிரான போட்டியின் மூலமாக இந்தியா முதல் முறையாக உலகக் கோப்பையில் விளையாடுகிறது.

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் உலகக் கோப்பையின் 21ஆவது லீக் போட்டி இன்று பிற்பகல் 2 மணிக்கு நடக்கிறது. தரம்சாலாவில் நடக்கும் இந்தப் போட்டியின் மூலமாக இந்தியா முதல் முறையாக இங்கு உலகக் கோப்பையில் விளையாடுகிறது. இந்த மைதானத்தில் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடிய ரோகித் சர்மா மொத்தமாக 20 ரன்களை எடுத்துள்ளார். மேலும், அதிகபட்சமாக 14 ரன்கள் எடுத்துள்ளார்.

IND vs NZ: டாஸ் மழையால் பாதிக்க வாய்ப்பு: இந்தியா – நியூசிலாந்து போட்டியில் மழை குறுக்கீடுக்கு வாய்ப்பு?

இதே போன்று, விராட் கோலி இந்த மைதானத்தில் 4 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி ஒரு அரைசதம் மற்றும் ஒரு சதம் உள்பட மொத்தமாக 255 ரன்கள் எடுத்துள்ளார். இதில் அதிகபட்சமாக 127 ரன்கள் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் விளையாடிய 116 ஒரு நாள் போட்டிகளில் 58 போட்டிகளில் இந்தியாவும், 50 போட்டிகளில் நியூசிலாந்து அணியும் வெற்றி பெற்றுள்ளன. மேலும், 7 போட்டிகளுக்கு முடிவு எட்டப்படவில்லை. ஒரு போட்டியானது டையில் முடிந்துள்ளது.

India vs New Zealand: கேன் வில்லியம்சன் இல்லை; இந்தியாவிற்கு எதிராக களமிறங்கும் டிம் சவுதி!

இந்த ஆண்டு தொடக்கத்தில் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட நியூசிலாந்து 3 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இதில், 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை 3-0 என்று இந்தியா கைப்பற்றியது. இதில் 3ஆவது ஒரு நாள் போட்டியில் இந்தியா அதிகபட்சமாக 385 ரன்கள் குவித்தது. மேலும், ரோகித் சர்மா 101 மற்றும் சுப்மன் கில் 112 ரன்கள் குவித்தனர். ஷர்துல் தாக்கூர் 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார். இதே போன்று 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-1 என்று இந்தியா கைப்பற்றியது.

India vs New Zealand 21st Match Dharamsala: தரம்சாலா ஸ்டேடியம் – ரோகித் சர்மாவின் அதிகபட்ச ஸ்கோர் 14 ரன்கள்!

இதுவரையில் இரு அணிகளும் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் 9 முறை மோதியுள்ளன. இதில், இந்தியா 3 முறையும், நியூசிலாந்து 5 முறையும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு போட்டி கைவிடப்பட்டது. இதில் இந்திய அணியின் அதிகபட்ச ஸ்கோர் 252 ரன்கள், குறைந்தபட்ச ஸ்கோர் 150 ரன்கள் ஆகும். இதே போன்று நியூசிலாந்து அணியின் அதிகபட்ச ஸ்கோர் 253 ரன்கள், குறைந்தபட்ச ஸ்கோர் 146 ரன்கள் ஆகும்.

 

 

India vs New Zealand: உலகக் கோப்பை 21ஆவது லீக் போட்டி – நியூசிலாந்திற்கு எதிராக இந்தியா கடந்து வந்த பாதை!

கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த உலகக் கோப்பை முதல் அரையிறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின. இதில், முதலில் விளையாடிய நியூசிலாந்து 239 ரன்கள் குவித்தது. பின்னர் ஆடிய இந்தியா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 221 ரன்கள் மட்டுமே எடுத்து 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

கோட்ஸி, ஜான்சென் வேகத்தில் மண்ணை கவ்விய இங்கிலாந்து 170க்கு ஆல் அவுட், புள்ளிப்பட்டியலில் 9ஆவது இடம்!

 

 

PREV
RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

இந்தியா vs தென்னாப்பிரிக்கா டி20 தொடரை எந்த டிவியில் பார்க்கலாம்? போட்டிகள் தொடங்கும் நேரம்?
கிரிக்கெட்டை பற்றி உங்களுக்கு என்ன தெரியும்? ஐபிஎல் உரிமையாளரை விளாசிய கவுதம் கம்பீர்! என்ன நடந்தது?