India vs New Zealand: டாஸ் வென்ற இந்தியா பவுலிங் – சூர்யகுமார் யாதவ், முகமது ஷமிக்கு வாய்ப்பு!

By Rsiva kumar  |  First Published Oct 22, 2023, 2:00 PM IST

நியூசிலாந்திற்கு எதிரான கிரிக்கெட் உலகக் கோப்பையின் 21ஆவது லீக் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பவுலிங் தேர்வு செய்துள்ளது.


இந்தியா நடத்தும் 13ஆவது கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் விறுவிறுப்பாகவும், பரபரப்பாகவும் சென்று கொண்டிருக்கிறது. கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் அரையிறுதிப் போட்டியில் மோதிய நியூசிலாந்து மற்றும் இந்தியா அணிகள் தான் இந்த ஆண்டு உலகக் கோப்பை போட்டிகளில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. இந்த இரு அணிகளும் தான் விளையாடிய 4 போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதல் 2 இடங்களை பிடித்துள்ளன.

India vs New Zealand: முதல் முறையாக தரம்சாலாவில் உலகக் கோப்பையில் விளையாடும் டீம் இந்தியா – சாதிக்குமா?

Tap to resize

Latest Videos

இந்த நிலையில் தான் இன்று தரம்சாலாவில் நடக்கும் 21ஆவது லீக் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் முதலில் பவுலிங் தேர்வு செய்துள்ளார். இந்திய அணியைப் பொற்த்தவரையில் காயம் காரணமாக ஹர்திக் பாண்டியா இடம் பெறாத நிலையில், அவருக்குப் பதிலாக சூர்யகுமார் யாதவ் இடம் பெற்றுள்ளார். மேலும், ஷர்துல் தாக்கூர் நீக்கப்பட்டு அவருக்குப் பதிலாக முகமது ஷமி அணியில் இடம் பெற்றுள்ளார்.

இந்தியா:

ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, குல்தீப் யாதவ், ஜஸ்ப்ரித் பும்ரா, முகமது சிராஜ்.

நியூசிலாந்து:

டெவான் கான்வே, வில் யங், ரச்சின் ரவீந்திரா, டேரில் மிட்செல், டாம் லாதம் (கேப்டன், விக்கெட் கீப்பர்), கிளென் பிலிப்ஸ், மார்க் சேப்மேன், மிட்செல் சாண்ட்னர், டிரெண்ட் போல்ட், மேட் ஹென்றி, லாக்கி ஃபெர்குசன்

IND vs NZ: டாஸ் மழையால் பாதிக்க வாய்ப்பு: இந்தியா – நியூசிலாந்து போட்டியில் மழை குறுக்கீடுக்கு வாய்ப்பு?

நியூசிலாந்து அணியைப் பொறுத்த வரையில் அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. காயத்திலிருந்து மீண்டு வந்த டிம் சவுதிக்கு அணியில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதுவரையில் தரம்சாலா மைதானத்தில் இந்திய அணி உலகக் கோப்பையில் விளையாடவில்லை. இன்றைய போட்டியின் மூலமாக முதல் முறையாக மோதுகின்றன.

 

Wow!
Can't wait for the India vs New Zealand match to start.

Kudos to whoever took the video. pic.twitter.com/qwIWZCC6Si

— Avinash Chandra Kishan (@AvinashCKishan)

 

Captain Rohit Sharma ❤️🔥 pic.twitter.com/qNy5xQtSSt

— Jod Insane (@jod_insane)

 

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் விளையாடிய 116 ஒரு நாள் போட்டிகளில் 58 போட்டிகளில் இந்தியாவும், 50 போட்டிகளில் நியூசிலாந்து அணியும் வெற்றி பெற்றுள்ளன. மேலும், 7 போட்டிகளுக்கு முடிவு எட்டப்படவில்லை. ஒரு போட்டியானது டையில் முடிந்துள்ளது.

India vs New Zealand: கேன் வில்லியம்சன் இல்லை; இந்தியாவிற்கு எதிராக களமிறங்கும் டிம் சவுதி!

இந்த ஆண்டு தொடக்கத்தில் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட நியூசிலாந்து 3 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இதில், 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை 3-0 என்று இந்தியா கைப்பற்றியது. இதில் 3ஆவது ஒரு நாள் போட்டியில் இந்தியா அதிகபட்சமாக 385 ரன்கள் குவித்தது. மேலும், ரோகித் சர்மா 101 மற்றும் சுப்மன் கில் 112 ரன்கள் குவித்தனர். ஷர்துல் தாக்கூர் 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார். இதே போன்று 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-1 என்று இந்தியா கைப்பற்றியது.

India vs New Zealand 21st Match Dharamsala: தரம்சாலா ஸ்டேடியம் – ரோகித் சர்மாவின் அதிகபட்ச ஸ்கோர் 14 ரன்கள்!

இதுவரையில் இரு அணிகளும் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் 9 முறை மோதியுள்ளன. இதில், இந்தியா 3 முறையும், நியூசிலாந்து 5 முறையும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு போட்டி கைவிடப்பட்டது. இதில் இந்திய அணியின் அதிகபட்ச ஸ்கோர் 252 ரன்கள், குறைந்தபட்ச ஸ்கோர் 150 ரன்கள் ஆகும். இதே போன்று நியூசிலாந்து அணியின் அதிகபட்ச ஸ்கோர் 253 ரன்கள், குறைந்தபட்ச ஸ்கோர் 146 ரன்கள் ஆகும்.

கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த உலகக் கோப்பை முதல் அரையிறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின. இதில், முதலில் விளையாடிய நியூசிலாந்து 239 ரன்கள் குவித்தது. பின்னர் ஆடிய இந்தியா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 221 ரன்கள் மட்டுமே எடுத்து 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. நியூசிலாந்திற்கு எதிராக இன்று நடக்கும் 21ஆவது லீக் போட்டியில் இந்திய அணியில் ஹர்திக் பாண்டியா இடம் பெறாத நிலையில் அவருக்குப் பதிலாக சூர்யகுமார் யாதவ் இடம் பெற்றுள்ளார்.

India vs New Zealand: உலகக் கோப்பை 21ஆவது லீக் போட்டி – நியூசிலாந்திற்கு எதிராக இந்தியா கடந்து வந்த பாதை!

click me!