உலகக் கோப்பை தகுதிச் சுற்று 2023க்கான சூப்பர் சிக்ஸ் போட்டியில் ஜிம்பாப்வே அணியை 31 ரன்கள் வித்தியாசத்தில் ஸ்காட்லாந்து அணி வீழ்த்தியுள்ளது.
இந்தியா நடத்தும் உலகக் கோப்பை தொடர் வரும் அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கி நவம்பர் 19 ஆம் தேதி வரையில் நடக்கிறது. 2023 ஆம் ஆண்டுக்கான உலகக் கோப்பை அட்டவணை அண்மையில் வெளியானது. இதில், மொத்தம் இடம் பெற்ற 10 அணிகளில் ஏற்கனவே நேரடியாக 8 அணிகள் உலகக் கோப்பைக்கு தகுதி பெற்ற நிலையில், இலங்கை அணி உலகக் கோப்பை தகுதிச் சுற்று சூப்பர் சிக்ஸ் பிரிவில் வெற்றி பெற்று உலகக் கோப்பைக்கு 9ஆவது அணியாக தகுதி பெற்றது.
இதையடுத்து 10ஆவது அணிக்கான போட்டியில் ஸ்காட்லாந்து, நெதர்லாந்து மற்றும் ஜிம்பாப்வே அணிகள் போட்டி போட்டன. இதில், இன்று ஸ்காட்லாந்து மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான சூப்பர் சிக்ஸின் 6ஆவது போட்டி நடந்தது. இதில், முதலில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பந்து வீசியது. அதன்படி முதலில் ஆடிய ஸ்காட்லாந்து அணியில், ஒவ்வொரு வீரர்களும் 20 ரன்களுக்கு மேல் எடுத்தனர். கடைசியாக வந்த மைக்கேல் லீஸ்க் 48 ரன்கள் எடுக்க, ஜிம்பாப்வே அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 234 ரன்கள் எடுத்தது.
முதல் முறையாக வெஸ்ட் இண்டீஸ் சென்ற ருதுராஜ், சுப்மன் கில், யஷஸ்வி: டெஸ்ட் போட்டி எப்படி இருக்கும்?
இதில், ஜிம்பாப்வே அணியைப் பொறுத்த வரையில் பந்து வீச்சில் சீயன் வில்லியம்ஸ் 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார். தென்டை சதாரா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினார். இதையடுத்து 235 ரன்களை வெற்றி இலக்காக கொண்ட ஜிம்பாப்வே அணி விளையாடியது. தொடக்க வீரர்கள் 0, 2, 12, 12 என்று சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். அதன்பிறகு வந்த ஷிகந்தர் ராஸா 34 ரன்களில் வெளியேறினார். ரியால் பர்ல் நிதானமாக விளையாடி 83 ரன்கள் எடுத்தார். கடைசியாக வெஸ்லி மாதேவேரே 40 ரன்கள் எடுக்க, மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர்.
13ஆவது ஆண்டு திருமண நாளை கொண்டாடும் தோனி அண்ட் சாக்ஷி தோனி!
இறுதியாக, ஜிம்பாப்வே அணி 41.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 203 ரன்கள் மட்டுமே எடுத்து 31 ரன்கள் வித்தியாசத்தில் பரிதாபமாக தோல்வி அடைந்தது. அதுமட்டுமின்றி இந்த உலகக் கோப்பையில் இடம் பெறுவதற்கான வாய்ப்பையும் இழந்து சோகத்துடன் இந்த தொடரிலிருந்து வெளியேறியுள்ளது.
இதுவரையில் விளையாடிய 5 போட்டிகளில் 3ல் வெற்றி பெற்றியும் 2ல் தோல்வியும் அடைந்து 3ஆவது அணியாக உலகக் கோப்பைக்கான வாய்ப்பை இழந்து ஜிம்பாப்வே அணி வெளியேறியுள்ளது. இதையடுத்து உலகக் கோப்பைக்கான வாய்ப்பு ஸ்காட்லாந்து மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு சென்றுள்ளது.
4ஆவது இடம் யாருக்கு? முதல் தகுதிச் சுற்றில் லைகா கோவை கிங்ஸ் – திண்டுக்கல் டிராகன்ஸ் பலப்பரீட்சை!
ஸ்காட்லாந்து 4 போட்டிகளில் விளையாடி 3ல் வெற்றியும், ஒரு போட்டியில் தோல்வியும் அடைந்துள்ளது. இதே போன்று நெதர்லாந்து அணி 4 போட்டிகளில் 2ல் வெற்றியும் 2ல் தோல்வியும் அடைந்துள்ளது. வரும் 6ஆம் தேதி ஸ்காட்லாந்து மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான கடைசி போட்டி நடக்கிறது. இலங்கை அணி தனது கடைசி போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியை எதிர்கொள்கிறது.
விராட் கோலியின் கிரிக்கெட் வாழ்க்கையில் 2023 உலகக் கோப்பை தான் கடைசி உலகக் கோப்பையா?