டி20 உலக கோப்பை: நியூசிலாந்து vs ஸ்காட்லாந்து மோதல்.. டாஸ் ரிப்போர்ட்

By karthikeyan VFirst Published Nov 3, 2021, 3:31 PM IST
Highlights

நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ஸ்காட்லாந்து அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்துள்ளது.
 

டி20 உலக கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. க்ரூப் 1-ல் இங்கிலாந்து அணியும், க்ரூப் 2-ல் பாகிஸ்தான் அணியும் அரையிறுதிக்கு முன்னேறிவிட்டன. க்ரூப் 1-லிருந்து 2வது அணியாக அரையிறுதிக்கு முன்னேற, தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது.

இதையும் படிங்க - ஆஃப்கானிஸ்தானுக்கு எதிராக களமிறங்கும் இந்திய அணியில் எத்தனை மாற்றங்கள்..? உத்தேச ஆடும் லெவன்

க்ரூப் 2-ல் பாகிஸ்தானுக்கு அடுத்து 2வது அணியாக அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பு, நியூசிலாந்து மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகளுடன் சேர்த்து இந்திய அணிக்கும் உள்ளது.

இதையும் படிங்க - ஐபிஎல் 2022: ஐபிஎல் அணிகளுக்கு செம குட் நியூஸ்..! மெகா ஏலத்துக்கு முன் பிசிசிஐ வெளியிட்ட அதிரடி அறிவிப்பு

இந்நிலையில், துபாயில் நடக்கும் இன்றைய போட்டியில் க்ரூப் 2-ல் இடம்பெற்றுள்ள நியூசிலாந்தும் ஸ்காட்லாந்தும் மோதுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஸ்காட்லாந்து அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்துள்ளது. எனவே நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் ஆடுகிறது.

Scotland have won the toss and elected to field first in Dubai 🏏 | | https://t.co/CIpjB9NXlM pic.twitter.com/UO5fOUoP0N

— ICC (@ICC)

இதையும் படிங்க - T20 World Cup ஆஃப்கானிஸ்தான் அணிக்கு சொந்த பணத்தில் ஸ்பான்சர் செய்த முகமது நபி? தீயாய்பரவும் தகவல்..! உண்மை என்ன?

நியூசிலாந்து அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இந்தியாவுக்கு எதிரான கடந்த போட்டியில் ஆடிய அதே ஆடும் லெவன் காம்பினேஷனுடன் தான் நியூசிலாந்து அணி ஆடுகிறது.

இதையும் படிங்க - ஆடவர் கிரிக்கெட் அணியின் முதல் பெண் பயிற்சியாளர் சாரா டெய்லர்..! இவர் தான் “பெண் தோனி” தெரியுமா..?

நியூசிலாந்து அணி:

மார்டின் கப்டில், டேரைல் மிட்செல், கேன் வில்லியம்சன் (கேப்டன்), டெவான் கான்வே (விக்கெட் கீப்பர்), ஜிம்மி நீஷம், க்ளென் ஃபிலிப்ஸ், மிட்செல் சாண்ட்னெர், ஆடம் மில்னே, டிம் சௌதி, இஷ் சோதி, டிரெண்ட் போல்ட்.

இதையும் படிங்க - எவின் லூயிஸின் ஆல்டைம் டி20 லெவனில் 5 இந்திய வீரர்கள்..! தல தோனி தான் கேப்டன்

ஸ்காட்லாந்து அணி:

ஜார்ஜ் முன்சி, கைல் கோயட்ஸர் (கேப்டன்), மேத்யூ க்ராஸ் (விக்கெட் கீப்பர்), ரிச்சி பெரிங்டன், காலம் மெக்லியாட், மைக்கேல் லீஸ்க், கிறிஸ் க்ரீவ்ஸ், மார்க் வாட், சாஃபியான் ஷாரிஃப், அலாஸ்டைர் இவான்ஸ், பிராட்லி வீல். 

இதையும் படிங்க - டி20 உலக கோப்பை ஃபைனலில் இந்த 2 அணிகள் தான் மோதும்..! சத்தியமா இந்தியா வராது.. பென் ஸ்டோக்ஸ் அதிரடி ஆருடம்
 

click me!