Sarfaraz Khan: பெற்றோருக்கு பெருமை சேர்த்த சர்ஃபராஸ் கான் – வைரலாகும் வீடியோ!

By Rsiva kumar  |  First Published Feb 16, 2024, 11:37 AM IST

தனது அறிமுக டெஸ்ட் போட்டியில் விளையாடிய சர்ஃப்ராஸ் கான் 62 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.


ராஜ்கோட்டில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3ஆவது டெஸ்ட் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இதில், டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியைப் பொறுத்த வரையில் சர்ஃபராஸ் கான் மற்றும் துருவ் ஜூரெல் ஆகியோர் அறிமுகம் செய்யப்பட்டனர். காயத்திலிருந்து மீண்டு வந்த ரவீந்திர ஜடேஜா இந்தப் போட்டியில் இடம் பெற்றார்.

அறிமுக போட்டியிலேயே மோசமான சாதனை - முதலிடம் பிடித்த சர்ஃபராஸ் கான்!

Tap to resize

Latest Videos

இதையடுத்து யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ரோகித் சர்மா இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில், ஜெய்ஸ்வால் 10 ரன்களில் ஆட்டமிழக்க அடுத்து வந்த சுப்மன் கில் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து வந்த விக்கெட் கீப்பர் ரஜத் படிதார் 5 ரன்களில் நடையை கட்டினார். ஒரு கட்டத்தில் இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 33 ரன்கள் மட்டுமே எடுத்து தத்தளித்தது.

IPL 2024: இந்தியாவில் தான், மார்ச் இறுதியில் ஐபிஎல் 2024 நடைபெறும் - அருண் சிங் துமால் உறுதி!

தொடர்ந்து ரோகித் சர்மா மற்றும் ரவீந்திர ஜடேஜா இருவரும் ஜோடி சேர்ந்து விக்கெட்டை கட்டுப்படுத்தி ரன்கள் சேர்த்தனர். ரோகித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 11ஆவது சதத்தை நிறைவு செய்தார். கடைசியாக 196 பந்துகளில் 14 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் உள்பட 131 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அதன் பிறகு சர்ஃபராஸ் கான் களமிறங்கினார்.

தனது முதல் டெஸ்ட் என்று கூட பார்க்காமல் தொடர்ந்து அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தார். 66 பந்துகளில் 9 பவுண்டரி, ஒரு சிக்ஸர் உள்பட 62 ரன்கள் எடுத்திருந்த போது ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார். சர்ஃபராஸ் கான் ரன் அவுட் ஆனதை தாக்கிக் கொள்ள முடியாமல் கேலரியில் இருந்த ரோகித் சர்மா தனது தொப்பியை தூக்கி எறிந்து தனது ஆத்திரத்தை வெளிப்படுத்தினார்.

India vs England 3rd Test: 16ஆவது இங்கிலாந்து வீரராக 100ஆவது டெஸ்ட்டில் விளையாடும் பென் ஸ்டோக்ஸ்!

இந்தப் போட்டியில் அறிமுகமான போது இந்திய அணியின் முன்னாள் வீரர் அனில் கும்ப்ளே சர்ஃபராஸ் கானுக்கு டெஸ்ட் போட்டிக்கான கேப்பை வழங்கினார். அதன் பிறகு தனது தந்தை நௌஷாத் கானை சந்தித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். மகனின் இந்திய அணியின் டெஸ்ட் தொப்பியை வாங்கி அதற்கு முத்தம் கொடுத்தார். மேலும், மகன் கிரிக்கெட் விளையாடியதைக் கண்டு ஆனந்தமடைந்தார். அவர் ரன் அவுட்டானது, கிரிக்கெட் வீரர்களுக்கு மட்டுமின்றி ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்துள்ளது.

Dhruv Jurel: தந்தை தான் ஹீரோ: இந்திய அணியின் கேப் அணியும் வாய்ப்பு கிடைத்தால் இதை செய்வேன் – துருவ் ஜூரெல்!

 

How he met with his father a Lovely hug 🫂 for strength ☺️ 😭😭😭😭 PROUD MOMENT 😊✋ 😭😭 pic.twitter.com/TtpOlOzc89

— ♚ 𝙎 𝙃 𝙆𝙝𝙖𝙣 ♚ (@Sham11ha)

 

click me!