IPL 2024: இந்தியாவில் தான், மார்ச் இறுதியில் ஐபிஎல் 2024 நடைபெறும் - அருண் சிங் துமால் உறுதி!

By Rsiva kumar  |  First Published Feb 14, 2024, 8:29 PM IST

ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடரானது இந்தியாவில் தான் நடைபெறும் என்று ஐபிஎல் சேர்மன் அருண் சிங் துமால் திட்டவட்டமாக உறுதி அளித்துள்ளார்.


ஒவ்வொரு ஆண்டும் பிசிசிஐயின் மூலமாக ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் முறையாக ஐபிஎல் சீசன் தொடங்கப்பட்டது. இதுவரையில் 16 சீசன்கள் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. இதில், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் தலா 5 முறை டிராபியை கைப்பற்றியுள்ளன. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 2 முறை டிராபியை கைப்பற்றியுள்ளது.

India vs England 3rd Test: 16ஆவது இங்கிலாந்து வீரராக 100ஆவது டெஸ்ட்டில் விளையாடும் பென் ஸ்டோக்ஸ்!

Tap to resize

Latest Videos

ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசனுக்கான ஏலம் கடந்த ஆண்டு துபாயில் நடந்தது. இதில், ஒவ்வொரு அணியும் புதிய புதிய வீரர்களை தங்களது அணியில் எடுத்துள்ளனர். அதிகபட்சமாக ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார் ரூ.24.75 கோடிக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் ஏலம் எடுக்கப்பட்டார். இதே போன்று பேட் கம்மின்ஸ் ரூ.20.50 கோடிக்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் ஏலம் எடுக்கப்பட்டார்.

Dhruv Jurel: தந்தை தான் ஹீரோ: இந்திய அணியின் கேப் அணியும் வாய்ப்பு கிடைத்தால் இதை செய்வேன் – துருவ் ஜூரெல்!

இந்த ஆண்டுக்கான ஏலம் வரும் மார்ச் மாதம் நடைபெற இருக்கிறது. ஆனால், இதுவரையில் தேதி குறித்து அறிவிக்கப்படவில்லை. இந்த நிலையில் தான் ஐபிஎல் சேர்மன் அருண் சிங் துமால் இந்தியாவில் தான் முழு போட்டிகளும் நடத்தப்பட உள்ளது. இந்தியாவில் மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் தேதிகளுக்காக காத்திருக்கிறோம்.

தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டவுடன் ஐபிஎல் தொடருக்கான தேதிகள் முடிவு செய்யப்படும். மேலும், இந்தியாவில் தான் ஐபிஎல் தொடரை நடத்த முயற்சி செய்து வருகிறோம். மார் மாத இறுதியில் ஐபிஎல் தொடங்கும். தேர்தல் ஏப்ரல் மாதத்தில் நடத்தப்படும். அரசின் உதவியுடன் அதை செய்வோம் என்று கூறியுள்ளார். இந்த தொடரில் மொத்தமாக 74 போட்டிகள் நடத்தப்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

India vs England: 2 வேகம், 2 சுழலுடன் களமிறங்கும் இங்கிலாந்து – இந்தியாவிற்கு ஸ்கெட்ச் போட்ட பென் ஸ்டோக்ஸ்! 

click me!