அறிமுக டெஸ்ட் போட்டியில் அரைசதம் அடித்து சாதனை படைத்த நிலையில், ரன் அவுட் ஆகி மோசமான சாதனை படைத்துள்ளார்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3ஆவது டெஸ்ட் போட்டி தற்போது ராஜ்கோட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில், டாஸ் வென்று இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா 131 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். சுப்மன் கில் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். ரஜத் படிதார் 5 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ரவீந்திர ஜடேஜா மற்றும் சர்ஃபராஸ் கான் இருவரும் இணைந்து சிறப்பாக விளையாடி ரன்கள் சேர்த்தனர்.
IPL 2024: இந்தியாவில் தான், மார்ச் இறுதியில் ஐபிஎல் 2024 நடைபெறும் - அருண் சிங் துமால் உறுதி!
தனது அறிமுக போட்டியில் களமிறங்கிய சர்ஃபராஸ் கானுக்கு அவரது தந்தை நௌஷாத் கான் தனது நெகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இந்திய அணியின் கேப்பிற்கு முத்தம் கொடுத்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். தொடர்ந்து தனது மகன் டெஸ்ட் போட்டியில் விளையாடியதைக் கண்டு பரவசமடைந்தார்.
India vs England 3rd Test: 16ஆவது இங்கிலாந்து வீரராக 100ஆவது டெஸ்ட்டில் விளையாடும் பென் ஸ்டோக்ஸ்!
இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த நிலையில் இந்தப் போட்டியில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய சர்ஃபராஸ் கான் 66 பந்துகளில் 9 பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸர் உள்பட 62 ரன்கள் குவித்து ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார்.
இதுவரை அறிமுக டெஸ்ட் போட்டியில் 13 வீரர்கள் ரன் அவுட்டில் ஆட்டமிழந்துள்ளனர். இதில் இருவர் மட்டுமே 50 ரன்களை கடந்துள்ளனர். அதிலும் அறிமுக போட்டியில் முதல் இன்னிங்ஸில் அரைசதம் அடித்த பிறகு ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை சர்ஃபராஸ் கான் படைத்துள்ளார்.
இதற்கு முன்னதாக, 65 ஆண்டுகளுக்கு முன்பு இந்திய வீரர் அப்பாஸ் அலி பாய் தனது அறிமுக போட்டியின் 2ஆவது இன்னிங்ஸில் 112 ரன்கள் குவித்து ரன் அவுட் ஆகியிருந்தார். தற்போது சர்ஃபராஸ் கான் தனது அறிமுக டெஸ்ட் போட்டியில் அரைசதம் அடித்த நிலையில் ரன் அவுட் ஆகி மோசமான சாதனை படைத்துள்ளார்.