இளம் வீரர்களுக்கு வாய்ப்பு மறுப்பு: ஓரங்கட்டப்பட்ட சர்பராஸ் கான், ஹனுமா விஹாரி!

By Rsiva kumar  |  First Published Jun 24, 2023, 2:53 PM IST

வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய டெஸ்ட் அணியில் சர்பராஸ் கான் மற்றும் ஹனுமா விஹாரி ஆகியோர் இடம் பெறாதது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இரண்டாவது முறையாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு சென்ற இந்திய அணி 2ஆவது முறையாகவும் தோல்வி அடைந்தது. இந்தப் போட்டியில் இடம் பெற்று விளையாடிய 35 வயதான சட்டேஷ்வர் புஜாரா தொடர்ந்து சொதப்பி வந்துள்ளார். இதன் காரணமாக அவர் வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடருக்கான இந்திய அணியில் இடம் பெறவில்லை.

அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரில் இடம் பெறும் ஜஸ்ப்ரித் பும்ரா!

Tap to resize

Latest Videos

ஆனால், டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகள் கொண்ட இந்திய அணியில் மூத்த வீரர்களுக்கு ஓய்வு அளிக்கபட்டு, அவர்களுக்குப் பதிலாக இளம் வீரர்கள் அணியில் இடம் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதிலேயும் ஹனுமா விஹாரி, சர்பராஸ் கான், அபிமன்யு ஈஸ்வரன் ஆகியோர் இடம் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ரஞ்சி டிராபி போட்டிகளில் சிறப்பாக விளையாடிய இவர்களுக்கு வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை.

கோலி ஆதரிக்கவில்லை என்றால் நான் திரும்ப வந்திருக்க முடியாது – யுவராஜ் சிங்!

புஜாரா மட்டுமே அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். மேலும், ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோருக்கு மட்டுமே அணியில் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதே போன்று பந்து வீச்சிலும் முகேஷ் குமார், நவ்தீப் சைனி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

உணவகம் வைத்திருக்கும் கிரிக்கெட் பிரபலங்கள்!

டெஸ்ட் போட்டிகளில் நின்று நிதானமாக விளையாடக் கூடிய வீரருக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். அதற்கு சரியான தேர்வாக ஹனுமா விஹாரி இருக்கும் நிலையில், அவர் அணியில் இடம் பெறவில்லை. இதே போன்று ரஞ்சி டிராபியில் அதிக ரன்கள் குவித்த சர்பராஸ் கானுக்கும் இடம் அளிக்கப்படவில்லை.

நல்ல சந்தர்ப்பத்தை கோட்டை விட்ட டீம் இந்தியா: ஷமி, உமேஷ் யாதவ், புஜாராவுக்கு ரெஸ்டா? சுனில் கவாஸ்கர்!

இதே போன்று ரஞ்சி கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடி வரும் தொடக்க வீரர் அபிமன்யூ ஈஸ்வரனுக்கும் வாய்ப்பு வழங்கவில்லை. இதனால் உள்ளூர் கிரிக்கெட்டான ரஞ்சி கிரிக்கெட்டை விட ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக விளையாடிய வீரர்களுக்கு தான் முன்னுரிமை வழங்கப்படுகிறதா என்று கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது. சில முன்னாள் வீரர்களும் இது குறித்து கருத்துக்களையும் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நீ விளையாடியது போதும்; வெஸ்ட் இண்டீஸ் தொடரில் ஓரங்கட்டப்பட்ட புஜாரா!

click me!