இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ரா அயர்லாந்து தொடரின் மூலமாக இந்திய அணிக்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளார் ஜஸ்ப்ரித் பும்ரா காயம் காரணமாக, ஆசிய கோப்பை, டி20 உலகக் கோப்பை, இலங்கைக்கு எதிரான தொடர், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடர் மற்றும் ஐபிஎல் தொடர் என்று என்று எந்த தொடரிலும் இடம் பெறவில்லை. முதுகுப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக நியூசிலாந்தில் அறுவை சிகிச்சை செய்தார். இதையடுத்து நீண்ட நாள் ஓய்விற்குப் பிறகு பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சியை மேற்கொண்டார்.
கோலி ஆதரிக்கவில்லை என்றால் நான் திரும்ப வந்திருக்க முடியாது – யுவராஜ் சிங்!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்த இந்தியா அடுத்து ஆசிய கோப்பை மற்றும் முக்கியமான தொடரான ஒரு நாள் கிரிக்கெட் உலக் கோப்பை தொடரில் விளையாட இருக்கிறது. இதற்கு முன்னதாக வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர், 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது.
உணவகம் வைத்திருக்கும் கிரிக்கெட் பிரபலங்கள்!
டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடருக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. ஆனால், டி20 போட்டிகள் கொண்ட தொடருக்கான இந்திய அணி இன்னும் அறிவிக்கப்படவில்லை. டி20 தொடர் வரும் ஆகஸ்ட் 3 ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரையில் நடக்கிறது.
இந்த நிலையில், இந்த தொடரின் மூலமாக ஜஸ்ப்ரித் பும்ரா இந்திய அணிக்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வரும் அயர்லாந்துக்கு எதிரான தொடரின் மூலமாக இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்து ஆசிய கோப்பை மற்றும் ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் ஆரம்பிக்க உள்ள நிலையில், அதற்கு முன்னதாக பும்ராவை டி20 போட்டிகளில் பயன்படுத்தி அவரது உடல் தகுதியை பரிசோதனை செய்து கொள்ள பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
இதன் காரணமாக வரும் ஆகஸ்ட் 18, 20 மற்றும் 23 ஆம் தேதிகளில் இந்தியா மற்றும் அயலாந்து அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் நடக்க இருக்கிறது. இதில், ஜஸ்ப்ரித் பும்ரா இடம் பெற்று விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.
நீ விளையாடியது போதும்; வெஸ்ட் இண்டீஸ் தொடரில் ஓரங்கட்டப்பட்ட புஜாரா!
இதே போன்று பெங்களூரு தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சியை மேற்கொண்ட கேஎல் ராகுல் எப்போது அணிக்கு திரும்புவார் என்று தகவலும் இல்லை. ஷ்ரேயாஸ் ஐயர் குறித்தும் தகவல் இல்லை. எனினும், ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இடம் பெறுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.