2 போட்டியிலும் கோல்டன் டக்: வாய்ப்பை கோட்டை விட்ட சூர்யகுமார் யாதவ்: சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கிடைக்குமா?

By Rsiva kumarFirst Published Mar 19, 2023, 7:45 PM IST
Highlights

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2ஆவது ஒரு நாள் போட்டியில் சூர்யகுமார் யாதவ் கோல்டன் டக் முறையில் ஆட்டமிழந்ததைத் தொடர்ந்து அவருக்குப் பதிலாக சஞ்சு சாம்சனை தேர்வு செய்ய வேண்டும் என்று விமர்சனம் எழுந்து வருகிறது.
 

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் சூர்யகுமார் யாதவ், மிட்செல் ஸ்டார்க் ஓவரில் கோல்டன் டக் முறையில் ஆட்டமிழந்தார். இதே போன்று 2ஆவது ஒரு நாள் போட்டியிலும் மிட்செல் ஸ்டார் ஓவரில் கோல்டன் டக் முறையில் வெளியேறியுள்ளார். இதன் மூலமாக டி20 போட்டியில் நம்பர் ஒன் வீரராக திகழும் சூர்யகுமார் யாதவ் ஒரே அணிக்கு எதிராக அடுத்தடுத்த போட்டிகளில் கோல்டன் டக் முறையில் அவுட்டாகி மோசமான சாதனை படைத்துள்ளார்.

6 வருடங்களுக்கு பிறகு டக் அவுட்டில் மோசமான சாதனை படைத்த இந்தியா!

இதன் காரணமாக இதுவரையில் அணியில் எடுக்கப்படமால் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வரும் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்று டுவிட்டர் வாயிலாக விமர்சனம் எழுந்து வருகிறது. இதற்கிடையில் முதல் போட்டியில் சஞ்சு சாம்சன் எடுக்கப்படாதது குறித்து பிசிசிஐ, சஞ்சு சாம்சனுக்கு முழங்கால் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக சிகிச்சை பெற்று வந்த சஞ்சு சாம்சன், தற்போது காயத்திலிருந்து மீண்டு வரும் நிலையில் விரைவில் மீண்டும் கிரிக்கெட் விளையாடலாம் என்றும் தேசிய கிரிக்கெட் அகாடமி சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

பறவை போல பறந்த ஸ்டீவ் ஸ்மித் - ஹர்திக் பாண்டியாவை கெட்ச் போட்டு தூக்கிய ஆஸ்திரேலியா!

தற்போது சூர்யகுமார் யாதவ் ஒரு நாள் தொடரில் சொதப்பி வரும் நிலையில், அவருக்குப் பதிலாக மிடில் ஆர்டரில் களமிறங்க சஞ்சு சாம்சனுக்கு ஒரு பொன்னான வாய்ப்பாக அமைந்துள்ளது. இதுவரையில் 11 ஒரு நாள் போட்டிகளில் மட்டுமே அவர் விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2ஆவது ஒருநாள் போட்டி விசாகப்பட்டினத்தில் இன்று நடந்தது. இதில், டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய இந்திய அணி வீரர்கள் சுப்மன் கில் (0), சூர்யகுமார் யாதவ் (0), ரோகித் சர்மா (13), கேஎல் ராகுல் (9), விராட் கோலி (31), ரவீந்திர ஜடேஜா (16), ஹர்திக் பாண்டியா (1), குல்தீப் யாதவ் (4), முகமது ஷமி (0), முகமது சிராஜ் (0) என்று வரிசையாக ஆட்டமிக்க அக்‌ஷர் படேல் மட்டும் 29 ரனக்ளில் ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியாக 26 ஓவர்களில் இந்தியா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 117 ரன்கள் எடுத்து மோசமான சாதனை படைத்தது.

Asian Race Walking Championships - 20 கி.மீ பிரிவில் அக்‌ஷ்தீப் சிங் தங்கம், பிரியங்கா வெண்கலம் வென்று சாதனை!

பந்து வீச்சில் ஆஸ்திரேலியா தரப்பில் மிட்செல் ஸ்டார் 5 விக்கெட்டுகளும், சீன் அபாட் 3 விக்கெட்டுகளும், நாதன் எல்லிஸ் 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர். இதையடுத்து, 11 ஓவரிலேயே ஆஸ்திரேலியா விக்கெட் இழப்பின்றி 121 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றுள்ளது. இதில், மிட்செல் மார்ஷ் அதிரடியாக ஆடி அரைசதம் அடித்தார். அவர் 36 பந்துகளில் 6 பவுண்டரி, 6 சிக்சர்கள் உள்பட 66 ரன்களும், டிராவிட் ஹெட் 30 பந்துகளில் 10 பவுண்டரிகள் உள்பட 51 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்த வெற்றி மூலமாக ஆஸ்திரேலியா 1-1 என்று தொடரை சமன் செய்துள்ளது. இந்தப் போட்டியைத் தொடர்ந்து இரு அணிகளுக்கு இடையிலான கடைசி ஒரு நாள் போட்டி வரும் 22 ஆம் தேதி சென்னையில் நடக்கிறது. 

வந்தாரு, நின்னாரு, சென்றாரு, ரிபீட்டூ, வந்தாரு, நின்னாரு, சென்றாரு ரிபீட்டூ - சூர்யகுமார் யாதவ் கோல்டன் டக்!

click me!