IND vs AUS: ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் இந்திய அணியின் மோசமான தோல்வி இதுதான்..! நெகட்டிவ் ரெக்கார்டு

By karthikeyan VFirst Published Mar 19, 2023, 6:26 PM IST
Highlights

ஒருநாள் கிரிக்கெட்டில் மோசமான தோல்வியை சந்தித்து மோசமான சாதனையை படைத்தது இந்திய அணி.
 

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி ஜெயித்து 1-0 என முன்னிலை வகித்த நிலையில், 2வது ஒருநாள் போட்டி இன்று விசாகப்பட்டினத்தில் நடந்தது.

முதல் போட்டியில் ஆடிராத இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா இந்த போட்டியில் ஆடியதால் பெரிய எதிர்பார்ப்பு நிலவியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்ய, முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி வெறும் 117 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 

IND vs AUS: மிட்செல் மார்ஷ், டிராவிஸ் ஹெட் அதிரடி அரைசதம்.. வெறும் 11 ஓவரில் இலக்கை அடித்து ஆஸி., அபார வெற்றி

ஆஸ்திரேலிய இடது கை ஃபாஸ்ட் பவுலர் மிட்செல் ஸ்டார்க்கின் பவுலிங்கை சமாளிக்க முடியாமல் தொடக்கம் முதலே அவரிடம் விக்கெட்டை இழந்தனர் இந்திய வீரர்கள். ஷுப்மன் கில்(0), ரோஹித் சர்மா(13), சூர்யகுமார் யாதவ்(0), கேஎல் ராகுல்(9) ஆகிய 4 வீரர்களையும் மிட்செல் ஸ்டார்க் வீழ்த்த, நிலைத்து ஆடி நம்பிக்கையளித்த விராட் கோலியை 31 ரன்களுக்கு நேதன் எல்லிஸ் வீழ்த்தினார். ஜடேஜா 16 ரன்களும், அக்ஸர் படேல் 29 ரன்களும் அடித்தனர். இந்திய அணி வெறும் 26 ஓவரில் 117 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. மிட்செல் ஸ்டார்க் 5 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.

118 ரன்கள் என்ற எளிய இலக்கை விரட்டிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்கள் மிட்செல் மார்ஷ் மற்றும் டிராவிஸ் ஹெட் ஆகிய இருவரும் இணைந்து தொடக்கம் முதலே இந்திய அணியின் பவுலிங்கை அடித்து நொறுக்கி அரைசதம் அடித்தனர். அதிரடியாக ஆடி பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசிய மிட்செல் மார்ஷ் 28 பந்தில் அரைசதம் அடிக்க, டிராவிஸ் ஹெட் 29 பந்தில் அரைசதம் அடித்தார். மிட்செல் மார்ஷ் 36 பந்தில் 6 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்களுடன் 66 ரன்களையும், டிராவிஸ் ஹெட் 30 பந்தில் 10 பவுண்டரிகளுடன் 51 ரன்களையும் விளாச, 11  ஓவர்களில் இலக்கை அடித்து ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்று 1-1 என தொடரை சமன் செய்தது.

இந்த தோல்விதான் ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய அணியின் மோசமான தோல்வி. ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய அணிக்கு எதிராக, அதிக பந்துகள் மீதமிருக்க, ஒரு அணி பெற்ற மிகப்பெரிய வெற்றி இதுதான். 2019ம் ஆண்டு இந்தியாவிற்கு எதிரான ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 93 ரன்கள் என்ற இலக்கை 14.4 ஓவரில் அடித்து வெற்றி பெற்றதுதான் சாதனையாக இருந்தது.

ஐபிஎல்லில் இருந்து விலகிய ஆர்சிபி வீரர்.! ஏலத்தில் நம்பி எடுத்து ஏமாந்த ஆர்சிபி.. மாற்று வீரர் அறிவிப்பு

இப்போது ஆஸ்திரேலிய அணி 11 ஓவரில் 118 ரன்கள் என்ற இலக்கை அடித்து அபார வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது. ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய அணியின் மோசமான தோல்வி இது. மோசமான தோல்வியை பதிவு செய்து ஒருநாள் கிரிக்கெட்டில் மோசமான சாதனை படைத்துள்ளது.
 

click me!