ஆசிய கோப்பைக்கு 2023 முன்னதாக ஓணம் பண்டிகையான இன்று இந்திய கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன் தனது மனைவியுடன் மனதைக் கவரும் பதிவைப் பகிர்ந்துள்ளார்.
கேரளாவில் கொண்டாடப்படும் பாரம்பரியமிக்க பண்டிகைகளில் ஒன்று ஓணம். சாதி, மதம் பேதமின்றி அனைத்து கேரளா மக்கள் கொண்டாடும் பண்டிகை. கேரளாவின் அறுவடை திருநாள் என்றும் அழைக்கிறார்கள். கடந்த 21 ஆம் தேதி தொடங்கிய இந்த பண்டிகையானது நாளை வரை நடைபெறுகிறது.
இந்த ஓணம் பண்டிகையை முன்னிட்டு இந்திய கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன் தனது மனைவி சாருலதா ரமேஷ் உடன் மனதை கவரும் பதிவை பகிர்ந்துள்ளார். அதில், சாருலதா ரமேஷ் பிங்க் நிற உடை அணிந்தும், சஞ்சு சாம்சன் வேஷ்டி மற்றும் குர்தா அணிந்து கொண்டும் புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளனர். இந்த புகைப்படத்தை பகிர்ந்த சாருலதா ரமேஷ், அனைவருக்கும் எங்களது ஓணம் வாழ்த்துக்கள் என்று பதிவிட்டுள்ளார்.
Asia Cup 2023, KL Rahul: 2 போட்டிகளில் கேஎல் ராகுல் விளையாடமாட்டார் – ராகுல் டிராவிட் ஓபன் டாக்!
ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியின் பேக்கப் வீரராக இடம் சஞ்சு சாம்சன் இடம் பெற்றுள்ளார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டிகளில் இடம் பெற்று 9 மற்றும் 51 ரன்கள் எடுத்துள்ளார். கேஎல் ராகுல் முதல் 2 போட்டிகளில் விளையாடவில்லை என்றால், அவருக்குப் பதிலாக சஞ்சு சாம்சன் இடம் பெற வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
மும்பை இந்தியன்ஸ் வீரர் என்பதால், திலக் வர்மாவிற்கு இந்திய அணியில் இடமா? ரோகித் சர்மா பதில்!
ஆனால், பிசிசிஐ தேர்வுக்குழு தலைவரான அஜித் அகர்கர் கேஎல் ராகுலுக்குப் பதிலாக இஷான் கிஷான் இடம் பெறுவார் என்று கூறியுள்ளார். ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியிலிருந்து தான் உலகக் கோப்பைக்கான இந்திய அணி வீரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். அதுவும் வரும் செப்டம்பர் 3 ஆம் தேதி உலகக் கோப்பைக்கான இந்திய அணி வீரர்கள் அறிவிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
40 பந்தில் 101 ரன்கள் குவித்து பேட்டை தூக்கி எறிந்து சர்ச்சையை ஏற்படுத்திய இந்திய வீரர்!