ஐசிசி ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பை 2023 தொடரானது வரும் அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், தொடக்க விழாவில் ஜான்வி கபூர் மற்றும் சமந்தா ஆகியோரது நடன நிகழ்ச்சி நடக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரைத் தொடர்ந்து இந்தியா நடத்தும் உலகக் கோப்பை தொடரானது வரும் அக்டோபர் 5 ஆம் தேதி மிகவும் பிரமாண்டமான முறையில் தொடங்க உள்ளது. இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து ஆகிய 10 அணிகள் இடம் பெற்று விளையாட உள்ளன.
பாபர் அசாமை தாண்டி விராட் கோலியால் ஒன்னும் செய்ய முடியாது: டாம் மூடி!
அக்டோபர் 5 ஆம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் தொடங்கும் உலகக் கோப்பை தொடரானது நவம்பர் 19ஆம் தேதி வரையில் நடக்கிறது. சென்னை, ஹைதராபாத், மும்பை, கொல்கத்தா, டெல்லி, பெங்களூரு என்று மொத்தமாக 10 மைதானங்களில் 45 லீக் போட்டிகள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதில் மிகவும் முக்கியமான போட்டி என்றால் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் உலகக் கோப்பை போட்டி தான். இந்தப் போட்டியானது அக்டோபர் 14 ஆம் தேதி நடக்க இருக்கிறது.
இந்த உலகக் கோப்பை தொடரின் முதல் போட்டியும், கடைசி போட்டியும் அகமதாபாத் மைதானத்தில் நடக்கிறது. அதுமட்டுமின்றி மிகவும் முக்கியமான போட்டியும் இந்த மைதானத்தில் தான் நடக்கிறது. அக்.5ஆம் தேதி தொடங்கும் உலகக்கோப்பைத் தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் விளையாடுகின்றன. இந்தப் போட்டி அகமதாபாத் மைதானத்தில் நடக்கவுள்ளது. அதேபோல் நவ.4ஆம் தேதி இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகள் விளையாடும் போட்டியும், நவ.10ல் தென்னாப்பிரிக்கா - ஆஃப்கானிஸ்தான் போட்டியும், நவ.19ல் நடக்கும் இறுதிப் போட்டியும் அகமதாபாத் மைதானத்தில் நடக்கவுள்ளது.
உலக தடகள சாம்பியன்ஷிப்: வரலாற்று சாதனை படைத்த இந்திய வீரர்கள் இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்!
இந்த நிலையில் தான் அகமதாபாத் மைதானத்தில் தொடக்க விழா நடத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, வரும் அக்டோபர் 4 ஆம் தேதி உலகக் கோப்பை தொடரின் தொடக்க விழா நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதில், உலகக் கோப்பை தொடரில் பங்கேற்கும் 10 அணிகளின் கேப்டன்களும் பங்கேற்க இருப்பதாக கூறப்படுகிறது.
MS Dhoni Video: தனது காலில் விழும் ரசிகையை தடுத்து நிறுத்தி கை கொடுத்த தோனி; வைரலாகும் வீடியோ!
அதுமட்டுமின்றி உலகக் கோப்பை தொடக்க விழாவை கேப்டன்ஸ் டே என்று அழைக்க ஐசிசி மற்றும் பிசிசிஐ இணைந்து முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த தொடக்க விழாவில் ஜான்வி கபூர் மற்றும் சமந்தா ஆகியோரது நடன நிகழ்ச்சியும் நடக்க இருப்பதாக கூறப்படுகிறது. அகமதாபாத் மைதானத்தில நடந்த ஐபிஎல் தொடரின் தொடக்க விழாவில் பாலிவுட் பாடகர் அர்ஜித் சிங், நடிகை ராஷ்மிகா மந்தனா மற்றும் தமன்னா ஆகியோரது நடன நிகழ்ச்சி நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.