பாபர் அசாமை தாண்டி விராட் கோலியால் ஒன்னும் செய்ய முடியாது: டாம் மூடி!

By Rsiva kumar  |  First Published Aug 28, 2023, 9:59 AM IST

ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாமை தாண்டி விராட் கோலியால் ஒன்றும் செய்ய முடியாது என்று ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரர் டாம் மூடி விமர்சனம் செய்துள்ளார்.


ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது வரும் 30 ஆம் தேதி தொடங்குகிறது. இதுவரையில் நடந்த ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்களில் பாகிஸ்தான் 2 முறையும், இலங்கை 6 முறையும், இந்தியா 7 முறையும் டிராபியை கைப்பற்றியுள்ளன. தற்போது 16ஆவது சீசனுக்கான ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடர் தொடங்குகிறது. பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் நடக்கும் தொடர் என்பதால், இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு அதிக வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.

உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள்.. ஈட்டி எரிதலில் மீண்டும் ஒரு சாதனை - தங்கம் வென்றார் இந்தியர் நீரஜ் சோப்ரா!

Tap to resize

Latest Videos

இது ஒரு புறம் இருக்க, ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் பாபர் அசாமை தாண்டி விராட் கோலியால் ஒன்றும் செய்யவே முடியாது என்று ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரர் டாம் மூடி விமர்சனம் செய்துள்ளார்.  இது குறித்து டாம் மூடி கூறியிருப்பதாவது: விராட் கோலியுடன் ஒப்பிடப்படும் அளவிற்கு பாபர் அசாம் வளர்ந்து விட்டார். இலக்கை எட்டுவதில் விராட் கோலியைப் போன்று பாபர் அசாம் திறமை மிக்கவர். என்னதான் இருவருக்கும் இடையில் நிறைய ஒற்றுமை இருந்தாலும், பாபர் அசாமை தாண்டி இந்த ஆசிய கோப்பையில் விராட் கோலியால் ஒன்று செய்துவிட முடியாது.

உலக தடகள சாம்பியன்ஷிப்: வரலாற்று சாதனை படைத்த இந்திய வீரர்கள் இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்!

இருவரும் எப்படி விளையாடுகிறார்கள் என்பதை பார்க்க நான் ஆர்மாக இருக்கிறேன். ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்டு வரும் கேப்டன்களில் பாபர் அசாம் சிறந்து விளங்கி வருகிறார் என்று அவர் கூறியுள்ளார்.

MS Dhoni Video: தனது காலில் விழும் ரசிகையை தடுத்து நிறுத்தி கை கொடுத்த தோனி; வைரலாகும் வீடியோ!

click me!