உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணியானது டிராபியை கைப்பற்றும் என்று நம்புவதாக சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான உலகக் கோப்பை இறுதிப் போட்டி இன்று பிற்பகல் 2 மணிக்கு நடக்கிறது. இதில், இந்திய அணி வெற்றி பெற மணல் சிற்ப கலைஞரான சுதர்சன் பட்நாயக் தனது மணல் சிற்பத்தின் மூலமாக வாழ்த்து தெரிவித்துள்ளார். கடந்த அக்டோபர் 5 ஆம் தேதி இந்தியாவில் 13 ஆவது கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் தொடங்கியது. இதில், இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, நெதர்லாந்து உள்பட 10 அணிகள் இடம் பெற்று விளையாடின.
IND vs AUS World Cup Final: இந்திய அணிக்கு மணல் சிற்பத்தின் மூலமாக சுதர்சன் பட்நாயக் வாழ்த்து!
உலகக் கோப்பை தொடரின் 45 லீக் போட்டிகளின் முடிவில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகள் புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களை பிடித்து அரையிறுதிக்கு முன்னேறின. நியூசிலாந்திற்கு எதிராக நடந்த முதல் அரையிறுதிப் போட்டியில் இந்தியா வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இதே போன்று தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான 2ஆவது அரையிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
இதையடுத்து 20 ஆண்டுகளுக்கு பிறகு இரு அணிகளும் 2ஆவது முறையாக இறுதிப் போட்டியில் மோதுகின்றன. இந்தப் போட்டி அகமதாபாத் மைதானத்தில் இன்று பிற்பகல் 2 மணிக்கு நடக்கிறது. இதில், இந்தியா வெற்றி பெற கோயில்களில் சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும், அரசியல், சினிமா, கிரிக்கெட் பிரபலங்கள் என்று பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளன.
அந்த வகையில் இறுதிப் போட்டியை பார்ப்பதற்கு அகமதாபாத் வந்த முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த சச்சின் கூறியிருப்பதாவது: “எனது நல்வாழ்த்துக்களை தெரிவிக்க நான் இங்கு வந்துள்ளேன். இன்று கோப்பையை கைப்பற்றுவோம் என நம்புகிறோம். இந்த நாளுக்காக அனைவரும் காத்திருந்தனர் என்று தெரிவித்தார்.
கடந்த 1992 ஆம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டு வரையில் 6 உலகக் கோப்பை தொடர்களில் சச்சின் டெண்டுல்கர் விளையாடியுள்ளார். கடந்த 1992, 1996, 1996 மற்றும் 1999 ஆம் ஆண்டுகளில் நடந்த உலகக் கோப்பை போட்டிகளில் இந்திய அணிக்கு முகமது அசாரூதீன் கேப்டனாக இருந்துள்ளார். இதையடுத்து 2003 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் சவுரவ் கங்குலி கேப்டனாகவும், 2007 ஆம் ஆண்டு உலகக் கோப்பைக்கு ராகுல் டிராவிட் கேப்டனாகவும் இருந்துள்ளார்.
அதன் பிறகு 2011 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் இந்திய அணியை எம்.எஸ்.தோனி வழிநடத்தினார. 2019 ஆம் ஆண்டு உலகக் கோப்பைக்கு விராட் கோலி கேப்டனாக இருந்துள்ளார். இந்த நிலையில் தான் சச்சின் டெண்டுல்கர் தனது கிரிக்கெட் வாழ்க்கையில் 6ஆவது உலகக் கோப்பையில் வெற்றி பெற்றுள்ளார். 2011 ஆம் ஆண்டு தோனி தலைமையிலான இந்திய அணியானது டிராபியை கைப்பற்றி சச்சினுக்கு அர்ப்பணித்தது என்பது குறிப்பிடத்தக்கது.