மகளிர் பிரீமியர் லீக் போட்டியில் இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மகளிர் அணி பவுலிங் தேர்வு செய்துள்ளது.
ஆண்கள் ஐபிஎல் டி20 கிரிக்கெட்டைப் போன்று மகளிருக்கும் பிரீமியர் லீக் எனப்படும் டி20 கிரிக்கெட் இந்த ஆண்டு தொடங்கப்பட்டது. கடந்த 4ஆம் தேதி மகளிருக்கான பிரீமியர் லீக் தொடரின் முதல் சீசன் பிரம்மாண்டமாக தொடங்கப்பட்டது. மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேபிடல்ஸ், யுபி வாரியர்ஸ், குஜராத் ஜெயிண்ட்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு என்று மொத்தமாக 5 அணிகள் இந்த முதல் சீசனில் பங்கேற்று விளையாடி வருகின்றன.
காயம் பட்ட தழும்புகளுடன் தண்ணீருக்குள் வாக்கிங் ஸ்டிக் வச்சு நடைபயிற்சி செய்யும் ரிஷப் பண்ட்!
ஆர்சிபி அணி:
ஸ்மிருதி மந்தனா (கேப்டன்), சோஃபி டிவைன், எலைஸ் பெர்ரி, ஹீதர் நைட், ரிச்சா கோஷ் (விக்கெட் கீப்பர்), ஷ்ரேயங்கா பாட்டீல், திஷா கசட், மேகன் ஸ்கட், ஆஷா சோபனா, ரேணுகா தாகூர் சிங், கனிகா அஹுஜா.
யுபி வாரியர்ஸ் அணி:
அலைஸா ஹீலி (கேப்டன்/விக்கெட் கீப்பர்), தேவிகா வைத்யா, கிரன் நவ்கிரே, கிரேஸ் ஹாரிஸ், டாலியா மெக்ராத், தீப்தி ஷர்மா, சிம்ரன் ஷேக், சோஃபி எக்லிஸ்டோன், ஷ்வேதா செராவத், அஞ்சலி சர்வானி, ராஜேஷ்வர் கெய்க்வாட்.
புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும். 2ஆவது மற்றும் 3ஆவது இடத்தில் இருக்கும் அணிகளுக்கு இடையில் எலிமினேட்டர் போட்டி நடக்கும். இதில், வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும். தற்போது புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி (5 வெற்றி) உள்ளது. 2ஆவது இடத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியும் (4 வெற்றி), 3ஆவது இடத்தில் யுபி வாரியஸ் அணியும் (2 வெற்றி) 4ஆவது இடத்தில் குஜராத் ஜெயின்ட்ஸ் அணியும் (1 வெற்றி) உள்ளன. கடைசி இடத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி உள்ளது. இதுவரையில் 5 போட்டிகளில் விளையாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 5 போட்டியிலும் தோல்வியை தழுவியுள்ளது.
ஷ்ரேயாஸ் ஐயர் இடத்தில் சாதிக்க துடிக்கும் கேரளத்து இளம் புயல் - யார் தெரியுமா?
இந்த நிலையில், யுபி வாரியர்ஸ் அணிக்கு எதிராக இன்று நடக்கும் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தோற்றால் தொடரிலிருந்து வெளியேற வேண்டியது தான். வெற்றி பெற்றால் மற்ற அணிகளின் வெற்றி, தோல்வியைப் பொறுத்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவின் எலிமினேட்டர் வாய்ப்பு அமையும். இன்றைய போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி பவுலிங் தேர்வு செய்துள்ளது. ஆர்சிபி அணியில் பிரீத்தி போஸ்க்கு பதிலாக கனிகா அஹூஜா அணிக்கு திரும்பியுள்ளார்.
இதே போன்று யுபி வாரியர்ஸ் அணியில் ஷப்னிம் இஸ்மாயில்லிற்கு பதிலாக கிரேஸ் ஹாரிஸ் அணிக்கு திரும்பியுள்ளார். இந்தப் போட்டியில் யுபி வாரியர்ஸ் வெற்றி பெற்றால் எலிமினேட்டருக்கு தகுதி பெறும் வாய்ப்பு அதிகமாக இருக்கும்.