காயம் பட்ட தழும்புகளுடன் தண்ணீருக்குள் வாக்கிங் ஸ்டிக் வச்சு நடைபயிற்சி செய்யும் ரிஷப் பண்ட்!

By Rsiva kumar  |  First Published Mar 15, 2023, 5:32 PM IST

காயம் பட்ட தழும்புகளுடன் தண்ணீருக்குள் வாக்கிங் ஸ்டிக் வைத்து நடைபயிற்சி மேற்கொண்டு வரும் ரிஷப் பண்டின் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


ரிஷப் பண்ட் கார் விபத்தில் பலத்த காயமடைந்து டேராடூனில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அதன் பிறகு மும்பையில் உள்ள கோகிலாபெண் திருபாய் அம்பானி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு முழங்கால் பகுதியில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. ஒரு மாதத்திற்கும் மேலாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். 

ராஜஸ்தான் ராயல்ஸைப் போன்று மும்பை இந்தியன்ஸ் பிளே ஆஃப் தகுதி - வரலாற்று சாதனையில் டைட்டில் வின் பண்ணுமா?

Tap to resize

Latest Videos

தசைநார்களில் அதிகளவில் பாதிப்பு ஏற்பட்டிருந்த நிலையில், தசை நார்களில் பெரிய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதையடுத்து, இனிமேல் அறுவை சிகிச்சை தேவைப்படாது என்று மருத்துவர்கள் கூறியிருந்தனர். ஆனால், அவ்வப்போது மருத்துவ பரிசோதனை மட்டும் மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியிருந்தனர். இதையடுத்து கடந்த பிப்ரவரி மாதம் வீடு திரும்பிய ரிஷப் பண்ட் வீட்டிற்கு வெளியில் அமர்ந்து இயற்கை காற்றை சுவாசித்து வந்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். 

ஷ்ரேயாஸ் ஐயர் இடத்தில் சாதிக்க துடிக்கும் கேரளத்து இளம் புயல் - யார் தெரியுமா?

இந்த நிலையில், தற்போது ஒரு வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், சிறிய விஷயம், பெரிய விஷயங்கள் மற்றும் இடையில் உள்ள எல்லாவற்றிற்கும் நன்றி என்று குறிப்பிட்டிருந்தார். இந்த வீடியோவில் ரிஷப் பண்ட்டிற்கு முதுகுப் பகுதியில் காயம்பட்ட தழும்புகளுடன் தண்ணீருக்குள் வாக்கிங் ஸ்டிக் பயன்படுத்தி  நடைபயிற்சி மேற்கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஷமி, உமேஷ் யாதவ், சிராஜிற்கு டியூப் பந்து அனுப்பி வைப்பு; நேரம் கிடைக்கும் போது பயிற்சி செய்ய அறிவுறுத்தல்!

வரும் 31 ஆம் தேதி ஐபிஎல் தொடருக்கான 16ஆவது சீசன் ஆரம்பிக்க உள்ள நிலையில், டெல்லி கேபில்டஸ் அணியின் கேப்டனான ரிஷப் பண்ட் தனது அணியின் வெற்றிக்காக ஒரு ஆலோசகராக வந்து பார்வையிடுவதற்கு வாய்ப்புகள் அதிகளவில் உள்ளதாக கூறப்படுகிறது. அணியின் பயிற்சியாளரான ரிக்கி பாண்டிங் கூட, ரிஷப் பண்ட் தன்னோடு வந்து அமர்ந்து போட்டியை பார்த்தால் கூட போதும் என்று அண்மையில் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

எப்படியும் 6 டீம் வெளிய போயிடும் - லாஸ்ட்டுல ஃபர்ஸ்ட் யாரு வர்றாங்களோ அவங்க இங்கிலாந்துக்கு ஃபர்ஸ்டா போவாங்க!

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Rishabh Pant (@rishabpant)

 

click me!