
இந்திய அணியின் தொடக்க வீரராக களமிறங்கும் ஷுப்மன் கில் அனைத்து பார்மேட்டுகளிலும் சதம் விளாசியுள்ளார். இளம் வயதில் இரட்டை சதம் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். இந்த ஆண்டில் இதுவரையில் 6 ஒரு நாள் போட்டிகளில் விளையாடிய ஷுப்மன் கில் 2 சதங்கள், ஒரு இரட்டை சதம் அடித்துள்ளார். டி20 போட்டியில் ஒரு சதம் அடித்துள்ளார்.
ஷ்ரேயாஸ் ஐயர் இடத்தில் சாதிக்க துடிக்கும் கேரளத்து இளம் புயல் - யார் தெரியுமா?
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான கடைசி டெஸ்ட் போட்டியில் சதம் விளாசி இந்திய அணி அதிக ரன்கள் குவிக்க வித்திட்டார். இந்தப் போட்டியில் சதம் அடித்ததன் மூலமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இரண்டாவது சதத்தை பூர்த்தி செய்தார். பொறுமையாக நின்று தேவைப்படும் போது பவுண்டரியும், சிக்சரும் விளாசினார். இந்த நிலையில், இவரது பேட்டிங்கில் விராட் கோலியின் நிதானமும், விரேந்திர சேவாக்கின் அதிரடி மற்றும் தைரியம் இருக்கிறது என்று முன்னாள் இந்திய வீரர் சஞ்சய் மஞ்ரேக்கர் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நன்றாக பந்துகளை எதிர்கொள்வார். எந்த பந்துகளில் அடிக்க வேண்டும் என்று தெரிந்து கொள்வார். டெஸ்ட் கிரிக்கெட்டில் நீண்ட காலம் நீடிக்க இது மிகவும் உதவியாக இருக்கும். எந்த பந்துகளில் பவுண்டரி அடிக்க வேண்டும், எந்தப் பந்துகளில் சிக்சர் அடிக்க வேண்டும் என்று தெரிந்து வைத்துக் கொண்டு அதற்கேற்பவே அடித்து விளையாடுகிறார். ஒரு சிலர்களிடம் மட்டுமே இது போன்ற ஆற்றல் இருக்கும். அது ஷுப்மல் கில்லிடம் இருக்கிறது என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.