ரோகித் சர்மா மிடில் ஆர்டரில் பேட்டிங் செய்தால் மட்டுமே அவரால் சிறப்பாக விளையாட முடியும் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் அனில் கும்ப்ளே தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் 2023 தொடரின் 16 ஆவது சீசன் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. ஹோம் மைதானங்களில் நடந்த போட்டிகளில் அந்தந்த அணிகளே தற்போது வரையிலும் வெற்றி வாகை சூடியுள்ளன. ஆனால், ஹைதராபாத் அணிக்கு எதிராக நடந்த போட்டியில் மட்டும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி வாகை சூடியது. நேற்று பெங்களூருவில் உள்ள சின்னச்சாமி மைதானத்தில் நடந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
IPL 2023: ஒரே மேட்ச் தான், யாருன்னு காட்டிய லக்னோ; பதிலடி கொடுக்குமா சென்னை சூப்பர் கிங்ஸ்?
கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து ஓபனிங் ஆடி வரும் ரோகித் சர்மா சொதப்பி வரும் நிலையில், அவர் ஓபனிங் இறங்குவதற்குப் பதிலாக மிடில் ஆர்டரில் இறங்கி பேட்டிங் ஆட வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் அனில் கும்ப்ளே தெரிவித்துள்ளார். மும்பை அணியில் இஷான் கிஷான், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, கேமரூன் க்ரீன், நேகல் வதேரா என்று நட்சத்திர வீரர்கள் இருக்கும் நிலையில், ரோகித் சர்மா மிடில் ஆர்டரில் இறங்கினால் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பலமாக இருக்கும்.
ஏனென்றால், மிடில் ஆர்டரில் அனுபவம் இல்லாத வீரர்கள் இருக்கும் நிலையில், அனுபவம் வாய்ந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேஎன்கள் தேவை. ஆனால், கண்டிப்பாக ரோகித் சர்மா போன்ற அனுபவம் வாய்ந்த வீரர்கள் மிடில் ஆர்டரில் இறங்கி விளையாட வேண்டும் அப்படி செய்வதன் மூலமாக 7 முதல் 15 ஓவர்களில் மும்பை இந்தியன்ஸ் அணியால் நல்ல ஸ்கோரை எட்ட முடியும் என்று அனில் கும்ப்ளே தெரிவித்துள்ளார்.