IPL 2023: என் மேல தான் தப்பு.. ஆர்சிபிக்கு எதிரான மும்பை இந்தியன்ஸின் படுதோல்வி..! ரோஹித் சர்மா சொன்ன காரணம்

By karthikeyan V  |  First Published Apr 3, 2023, 3:44 PM IST

ஆர்சிபிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி படுதோல்வி அடைந்த நிலையில், தோல்விக்கான காரணத்தை கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.
 


ஐபிஎல் 16வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இந்த சீசனில் முதல் முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில் களமிறங்கியுள்ள ஆர்சிபி மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் முதல் போட்டியில் வெற்றி பெற்றுள்ளன. அதேவேளையில் ஐபிஎல்லில் பலமுறை கோப்பையை வென்று வெற்றிகரமான அணிகளாக திகழும் மும்பை இந்தியன்ஸ் (5) மற்றும் சிஎஸ்கே(4) ஆகிய அணிகள் முதல் போட்டியில் தோல்வியை தழுவின.

ஆனால் சாம்பியன் அணிகளான மும்பை இந்தியன்ஸ் மற்றும் சிஎஸ்கே அணிகள் ஐபிஎல்லில் பெரிய போட்டிகளில் வெற்றிபெறும் வித்தையறிந்த அணிகள். மேலும் தோல்வியிலிருந்து மீண்டெழும் வல்லமை கொண்டவை..

Tap to resize

Latest Videos

IPL 2023: தம்பி நீ சரிப்பட்டு வரமாட்ட.. தூக்கி எறியும் சிஎஸ்கே..! ஆடும் லெவனில் ஒரு அதிரடி மாற்றம்

ஆர்சிபி - மும்பை இந்தியன்ஸ் இடையே பெங்களூருவில் நடந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணியின் ரோஹித் சர்மா(1), இஷான் கிஷன்(10), கேமரூன் க்ரீன்(5), சூர்யகுமார் யாதவ்(15) ஆகிய டாப் 4 வீரர்களும் படுமோசமாக சொதப்பினர். குறிப்பாக ரோஹித் சர்மா 10 பந்தில் ஒரு ரன் மட்டுமே அடித்து பவர்ப்ளேயில் மும்பை இந்தியன்ஸுக்கு பின்னடைவை ஏற்படுத்தினார். அனைவரும் சொதப்ப, திலக் வர்மா மட்டும் தனி நபராக நிலைத்து நின்று அடித்து ஆடி அரைசதம் அடித்தார். 46 பந்தில் 84 ரன்களை குவித்து கடைசி வரை நின்று இன்னிங்ஸை முடித்து கொடுக்க 20 ஓவரில் 171 ரன்கள் அடித்தது மும்பை இந்தியன்ஸ் அணி.

பெங்களூரு சின்னசாமி மைதானம் மிகச்சிறியது. ஆடுகளமும் பேட்டிங்கிற்கு சாதகமானது. அதனால் இந்த ஸ்கோர் கண்டிப்பாக போதாது. ஆனால் இந்த இலக்கை ஒரு விஷயமே இல்லை என்பதை போல ஆர்சிபி அடித்ததுதான் மும்பை இந்தியன்ஸுக்கு மரண அடியாக இருந்தது.

ஆர்சிபி தொடக்க வீரர்கள் ஃபாஃப் டுப்ளெசிஸ் மற்றும் விராட் கோலி ஆகிய இருவரும் இணைந்து பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசி இருவருமே அரைசதம் அடித்து முதல் விக்கெட்டுக்கு 146 ரன்களை குவித்தனர். ஃபாஃப் டுப்ளெசிஸ் 73 ரன்களுக்கு ஆட்டமிழக்க, 82 ரன்களை குவித்து கடைசி வரை நின்று போட்டியை முடித்து கொடுத்தார் விராட் கோலி. 17வது ஓவரிலேயே இலக்கை அடித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது ஆர்சிபி அணி.

IPL 2023: இந்தியாவின் முதல் பவுலர்.. டி20 கிரிக்கெட்டில் வரலாற்று சாதனை படைத்த சாஹல்

இந்த போட்டியில் அடைந்த தோல்வி குறித்து பேசிய மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோஹித் சர்மா, முதல் 6 ஓவர்களில் நாங்கள்  சரியாக பேட்டிங் ஆடவில்லை. திலக் வர்மா அபாரமாக பேட்டிங் ஆடினார். மற்ற சிலரும் நன்றாக ஆடினர். நாங்கள் பவுலிங்கும் சரியாக வீசவில்லை. பவுலிங்கில் திட்டங்களை சரியாக செயல்படுத்தவில்லை. பேட்டிங்கிற்கு சாதகமான ஆடுகளம். நாங்கள் சரியாக ஆடவில்லை என்று ரோஹித் சர்மா தெரிவித்தார். 
 

click me!