IPL 2023: தம்பி நீ சரிப்பட்டு வரமாட்ட.. தூக்கி எறியும் சிஎஸ்கே..! ஆடும் லெவனில் ஒரு அதிரடி மாற்றம்

Published : Apr 03, 2023, 02:53 PM IST
IPL 2023: தம்பி நீ சரிப்பட்டு வரமாட்ட.. தூக்கி எறியும் சிஎஸ்கே..! ஆடும் லெவனில் ஒரு அதிரடி மாற்றம்

சுருக்கம்

ஐபிஎல் 16வது சீசனின் இன்றைய போட்டியில் களமிறங்கும் சிஎஸ்கே மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.  

ஐபிஎல் 16வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. முதல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸிடம் தோற்ற சிஎஸ்கே அணி இன்றைய போட்டியில் கேஎல் ராகுல் தலைமையிலான வலுவான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

சென்னை சேப்பாக்கத்தில் 4 ஆண்டுகளுக்கு பிறகு இன்றுதான் இந்த போட்டி நடக்கிறது. எனவே இந்த போட்டியில் சொந்த மண்ணில் வெற்றியை பெறும் முனைப்பில் சிஎஸ்கே அணி களமிறங்குகிறது. லக்னோ அணியும் முதல் போட்டியில் டெல்லி கேபிடள்ஸை வீழ்த்திய் அதே உத்வேகத்துடனும் நம்பிக்கையுடனும் சிஎஸ்கேவை எதிர்கொள்கிறது.

இந்த போட்டியில் களமிறங்கும் சிஎஸ்கே மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம். 

IPL 2023: இந்தியாவின் முதல் பவுலர்.. டி20 கிரிக்கெட்டில் வரலாற்று சாதனை படைத்த சாஹல்

சிஎஸ்கே அணி ஜெயித்தாலும் தோற்றாலும் பெரிதாக மாற்றங்களை செய்ய விரும்பாத அணி. ஆனால் இன்றைய போட்டிக்கான ஆடும் லெவனில் ஒரு மாற்றம் செய்யப்படலாம். ஷிவம் துபேவிற்கு கடந்த சீசனில் தொடர் வாய்ப்புகள் அளிக்கப்பட்டபோதிலும், அவர் சரியாக ஆடவில்லை. சிஎஸ்கே அணியில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. இந்த சீசனிலும் முதல் போட்டியில் அவருக்கு ஆட வாய்ப்பளிக்கப்பட்டது. ஆனால் சோபிக்கவில்லை. எனவே இன்றைய போட்டியில் அவர் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக பிரசாந்த் சோலங்கி சேர்க்கப்படலாம் என தெரிகிறது.

உத்தேச சிஎஸ்கே அணி:

டெவான் கான்வே, ருதுராஜ் கெய்க்வாட், மொயின் அலி, பென் ஸ்டோக்ஸ், அம்பாதி ராயுடு, ரவீந்திர ஜடேஜா, பிரசாந்த் சோலங்கி, தோனி (கேப்டன், விக்கெட் கீப்பர்), தீபக் சாஹர், மிட்செல் சாண்ட்னெர், ராஜ்வர்தன் ஹங்கர்கேகர்.

IPL 2023: இந்த சீசனில் நான் ரொம்ப எதிர்பார்க்குற பிளேயர் அவர்தான்! வேற லெவல் சம்பவம் வெயிட்டிங் - ஹர்பஜன் சிங்

உத்தேச லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி:

கேஎல் ராகுல், கைல் மேயர்ஸ், நிகோலஸ் பூரன், மார்கஸ் ஸ்டோய்னிஸ், தீபக் ஹூடா, க்ருணல் பாண்டியா, ஆயுஷ் பதோனி, மார்க் உட், ஜெய்தேவ் உனாத்கத், ரவி பிஷ்னோய், ஆவேஷ் கான்.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

India Vs West Indies: ரோஹித், கோலி ரிட்டர்ன்ஸ்! 6 பேருக்கு கல்தா; அகர்கர் போட்ட அதிரடி
IND vs AFG 2nd T20: தமிழக வீரர் விலகல்.. சஞ்சு சாம்சன் நீக்கம்.. இளம் வீரருக்கு இடம்.. பிளேயிங் லெவன்!