நான் தொடக்க வீரராக பெற்ற வெற்றிக்கு டேட்டா அனாலிட்டிக்ஸ் தான் காரணம் என்று இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலா கடைசி ஒரு நாள் போட்டி சென்னையில் நடந்தது. இதில் டாஸ் வென்று முதலில் ஆடிய ஆஸ்திரேலியா 269 ரன்கள் குவித்தது. இதையடுத்து, 270 ரன்களை வெற்றி இலக்காக கொண்ட இந்திய அணிக்கு அதிர்த்தி தான் மிஞ்சியது. விராட் கோலி, ஹர்திக் பாண்டியா, சுப்மன் கில்லைத் தவிர மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற இந்தியா 21 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.
இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு ஸ்போர்ட்ஸ் மெக்கானிக்ஸ், ஒரு முன்னோடி விளையாட்டு தொழில்நுட்பம், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துடன் 20 ஆண்டு கால தொடர்பை நிறைவு செய்ததால், சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. இந்த நிகழ்ச்சியில் இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மற்றும் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா இருவரும் கலந்து கொண்டனர்.
இந்தியாவுல ஆஸ்திரேலியா ODI சாம்பியன் என்றால், ஆஸ்திரேலியாவுல இந்தியா Test சாம்பியன்!
அப்போது தனது அனுபவம் குறித்து பேசிய ரோகித் சர்மா, கடந்த 2013 ஆம் ஆண்டு என்னை தொடக்க வீரராக களமிறங்க கேட்டுக் கொண்ட போது, நான் முதலில் உலக அளவில் சிறந்த தொடக்க ஆட்டக்காரர்கள் என்ன செய்தார்கள், என்ன செய்கிறார்கள் என்ற காட்சிகளையும் தரவுகளையும் தான் பார்க்க விரும்பினேன். அதான் டேட்டா அனாலிட்டிக்ஸ். டேட்டா அனாலிடிக்ஸ் இல்லையென்றால், என்னால், தொடக்க வீரராக இன்று வெற்றி பெற்றிருக்க முடியாது என்று அவர் கூறியுள்ளார்.
சச்சின், ஜாகீர் கான் உள்பட 3 முறை டக் அவுட்டில் வெளியேறிய கிரிக்கெட் பிரபலங்கள் யார் யார்?
இவரைத் தொடர்ந்து பேசிய ராகுல் டிராவிட் கூறியிருப்பதாவது: வீரர்களுடன் மிகச் சிறப்பாக உரையாடுவதற்கு தொழில்நுட்பம் உதவுகிறது. வீரர்களுக்கு சிறந்த பயிற்சி அளிப்பதில் கூட டேட்டா மற்றும் தொழில்நுட்பம் முக்கிய பங்கு வகிக்கிறது என்று கூறியுள்ளார்.
கடந்த 2013 ஆம் ஆண்டு வரையில் மிடில் ஆர்டரில் விளையாடிக் கொண்டிருந்த ரோகித் சர்மாவை, ஒரு நாள் போட்டிகளில் தொடக்க வீரராக களமிறங்கச் சொன்னவர் எம் எஸ் தோனி. மிடில் ஆர்டர்னில் விளையாடிய ரோகித் சர்மா 74 போட்டிகளில் 2 சதங்கள் அடித்துள்ளார். இதுவே அவர், ஓபனிங் இறங்கி விளையாடி போது 28 சதங்கள் அடித்துள்ளார். அதுமட்டுமின்றி 3 முறை இரட்டை சதம் அடித்து புதிய வரலாற்று சாதனையும் இவர் படைத்திருக்கிறார். இதெல்லாம் நடந்தது ஓபனிங் இறங்கி விளையாடிய போது தான். கிரிக்கெட் வீரர்களுக்கு மட்டுமின்றி, தொழில்நுட்பம் பயிற்சியாளர்களை தயார்படுத்தவும், அவர்களுக்கு வியூகம் வகுக்கவும் உதவுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
அக்ஷர் படேலை மின்னல் வேகத்தில் படுத்துக் கொண்டே ரன் அவுட் செய்த ஸ்டீவ் ஸ்மித்!