IND vs NED: சர்வதேச கிரிக்கெட்டில் ஓபனராக 14,000 ரன்களை கடந்து ரோகித் சர்மா சாதனை!

By Rsiva kumar  |  First Published Nov 12, 2023, 4:03 PM IST

நெதர்லாந்து அணிக்கு எதிரான 45ஆவத் லீக் போட்டியில் இந்திய கேப்டன் ரோகித் சர்மா ஓபனராக சர்வதேச கிரிக்கெட்டில் 14,000 ரன்களை கடந்து சாதனை படைத்துள்ளார்.


உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் கடைசி மற்றும் 45ஆவது லீக் போட்டி தற்போது பெங்களூருவில் நடந்து வருகிறது. இதில், இந்தியா மற்றும் நெதர்லாந்து அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி சுப்மன் கில் மற்றும் ரோகித் சர்மா இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கி பவுண்டரியும், சிக்ஸருமாக விளாசினர்.

போதும் நீங்க விளையாடி கிழிச்சது – ஓரங்கப்பட்டப்பட்ட ஜானி பேர்ஸ்டோவ், பென் ஸ்டோக்ஸ், ஜோ ரூட்!

Tap to resize

Latest Videos

அதிரடியாக விளையாடிய சுப்மன் கில் 30 பந்துகளில் அரைசதம் அடித்தார். இதன் மூலமாக இந்த உலகக் கோப்பையில் 3ஆவது அரைசதம் அடித்தார். மேலும், ஒரு நாள் போட்டிகளில் 12ஆவது அரைசதம் இதுவாகும். அதற்கு முன்னதாக சுப்மன் கில் அடித்த சிக்ஸ் ஒன்று ஸ்டேடியத்தின் கூரை மீது விழுந்தது. அந்த சிக்ஸர் மட்டும் 95 மீ தூரம் வரை சென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், அவர் 32 பந்துகளில் 3 பவுண்டரி, 4 சிக்ஸர் உள்பட 51 ரன்கள் சேர்த்து வான் மீகெரென் பந்தில் தேஜா நிடமனுருவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

இவரைத் தொடர்ந்து ரோகித் சர்மா 44 பந்துகளில் 55ஆவது அரைசதம் அடித்தார். ஒருநாள் போட்டி உலகக் கோப்பைகளில் அதிக முறை 50 ரன்களுக்கு மேல் எடுத்தவர்களின் பட்டியலில் ரோகித் சர்மா 3ஆவது இடம் பிடித்துள்ளார். 26 இன்னிங்ஸ்களில் 13 முறை 50 ரன்களுக்கு மேல் அடித்துள்ளார். மேலும், சர்வதேச கிரிக்கெட்டில் 100ஆவது அரைசதம் அடித்து சாதனை படைத்துள்ளார்.

India vs Netherlands: சரவெடியாய் வெடிக்குமா ரோகித் சர்மா அண்ட் கோ? டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்!

இந்த நிலையில் தான் இந்தப் போட்டியின் மூலமாக சர்வதேச கிரிக்கெட்டி ஓபனராக களமிறங்கி 14000 ரன்களை கடந்து சாதனை படைத்துள்ளார். அவர், 325 இன்னிங்ஸ்களில் இந்த சாதனையை நிகழ்த்தியிருக்கிறார். இந்தப் போட்டியில் 12 ரன்கள் எடுத்ததன் மூலமாக 14000 ரன்களை கடந்துள்ளார். மொத்தமாக 14,049 ரன்கள் குவித்துள்ளார். அதுமட்டுமின்றி இந்த ஆண்டில் அதிக சிக்ஸர்கள் அடித்தவர்களின் பட்டியலில் தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் வீரர் ஏபி டிவிலியர்ஸ் சாதனையை முறியடித்துள்ளார்.

இந்த 2023 ஆம் ஆண்டில் மட்டும் அதிக சிக்ஸர்கள் (60) அடித்து ரோகித் சர்மா முதலிடம் பிடித்துள்ளார். டிவிலியர்ஸ் 58 சிக்ஸர்கள் (2015) அடித்து 2ஆவது இடத்தில் இருக்கிறார். கிறிஸ் கெயில் 56 சிக்ஸர்கள் (2019) அடித்துள்ளனர்.

IND vs NED: இந்தியாவின் வெற்றிக்காக காத்திருக்கும் வங்கதேசம்: சாம்பியன்ஸ் டிராபிக்கு தகுதி பெறுமா நெதர்லாந்து?

click me!